SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கி கடன் பெறுவது எப்படி?

2015-02-02@ 10:10:01

எல்லோருக்கும் வாழ்க்கையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். அதற்குப் பெரும்பாலானோர் வங்கிக் கடனை நம்பியிருப்பார்கள். மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனை திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் நீண்ட கால அவகாசம். வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்த கூடிய வசதி இருக்கிறது. கடனைச் திருப்பிச் செலுத்த நீண்டகாலத் தவணைகள் இருந்தாலும், சில நிபந்தனைகள் உண்டு.

அதாவது கடன் பெறும் நபர், பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் இஎம்இ(மாத தவணை) முடிந்து விடுமா என்பதை வங்கிகள் பார்க்கும். ஒரு வேளை ஓய்வு பெற்ற பிறகும், இஎம்இ செலுத்துவதற்கான வருமானம் இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். அதாவது அவரது ஓய்வூதியம் இஎம்இ செலுத்தப் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் கடன் அளிக்க வங்கிகள் முன் வரும். அதே சமயம் கடன் பெறுபவர், 60 வயதை கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக்கடனுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கடனைத்திருப்பிச் செலுத்தும் வகையில் நமது வருமானம் இருக்கிறதா? என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கும். நமது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகை உள்ளிட்ட அனைத்து வகைப்பிடித்தங்களும் போக, குறைந்த பட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை வங்கிகள் உறுதி செய்கின்றன. இதற்குக்காரணம் தவணை செலுத்துவதால் நமது அன்றாட குடும்பச் செலவுப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது. அச்சமயம் தவணையைச் சரியாக செலுத்த முடியாமல் போகலாம்.

வங்கிகள் கேட்கும் ஆவணங்கள், பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்ப படிவம், விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச்சான்று, வருமானச்சான்று, மனைப்பத்திரம், (சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்), தாய்ப்பத்திரம்(இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப்பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச்சான்று(ஈ.சி), விற்பனைப்பத்திரத்தின் நகல், சட்டவல்லுநரின் கருத்து(லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியின் பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகாரம் நகல்(சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்), கட்டுமான செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேன் ரிப்போர்ட்), வங்கிக் கடன் விண்ணப்பிக்கும் முன் இவற்றை வங்கிகளில் ஒரே நேரத்தில் தாக்கல் செய்து விட்டால் கால தாமதத்தைக் தவிர்க்கலாம்.

abilify and coke link abilify and coke
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

  • gst_tax11

    ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • tasMACCLOSingparotesttst

    "டாஸ்மாக் மூடும் போராட்டம்’’ என கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

  • mbbs_bds_11

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளில் 8,349 விண்ணப்பங்கள் விநியோகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்