பயஸ்,ஹிங்சிஸ் சாதனை

Date: 2015-02-02@ 02:08:08

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் (41 வயது) , மார்டினா ஹிங்கிஸ் (சுவிஸ், 34 வயது) ஜோடி சாம்பி யன் பட்டம் வென்று சாதனை படைத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கிறிஸ்டினா மிளாடெனோவிக் (பிரான்ஸ்) , டேனியல் நெஸ்டர் (கனடா) ஜோடியுடன் நேற்று மோதிய பயஸ் , ஹிங்கிஸ்  ஜோடி 6,4, 6,3 என்ற நேர்  செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டி ஒரு மணி, 2 நிமிடம் மட்டுமே நீடித்தது. லியாண்டர் பயசுக்கு இது 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். அவர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 8 முறையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 7 முறையும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று இந்தியா வுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற ஹிங்கிஸ், தற்போது தனது 3வது இன்னிங்சில் 16வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் ஒற்றை யர் பிரிவில் 5, இரட்டையர் பிரிவில் 9, கலப்பு இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதில் ஆஸ்திரேலியன் ஓபனில் மட்டுமே ஒற்றையர் பிரிவில் 3 (1997, 98, 99), இரட்டையர் பிரிவில் 4 (1997, 98, 99, 2002), கலப்பு இரட்டையர் பிரிவில் 2 (2006, 2015) என 9 பட்டங்களை  வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க நட்சத்திர வீராங்கனை மார்டினா நவ்ரத்திலோவாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த பயஸ், தற் போது சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து கோப்பையை கைப்பற்றி உள்ளார். போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த ஹிங்சிஸ், ‘20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கு நிற்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. பயசுடன் இணைந்து விளையாடுமாறு ஆலோசனை கூறிய  மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு இந்த சமயத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated
why do husbands have affairs women cheat on men wife affair

Like Us on Facebook Dinkaran Daily News