அசத்தினார் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன்

Date: 2015-02-02@ 02:07:41

பெர்த்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், 112 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெர்த், மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால், ஆஸ்திரேலியா  17.4 ஓவரில் 60 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. பிஞ்ச் 0, வார்னர் 12, கேப்டன் பெய்லி 2, ஸ்மித் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் , மிட்செல் மார்ஷ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 141 ரன் சேர்த்தது. மேக்ஸ்வெல் 95 ரன் (98 பந்து, 15 பவுண்டரி), மார்ஷ் 60 ரன்  (68 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜேம்ஸ் பாக்னர் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, ஆஸ்திரேலியா ஸ்கோர் எகிறியது.

 ஹாடின் 9, ஜான்சன் 3 ரன்னில் வெளியேறினர். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்தது. பாக்னர் 50 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்டார்க் (0) ஆட்ட மிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு 3, ஆண்டர்சன் 2, ஸ்டீவன் பின், மொயீன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 39.1 ஓவரிலேயே 166 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. போபாரா 33, மொயீன் அலி 26,  ஜோ ரூட் 25, பிராடு 24, பட்லர் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர் (கேப்டன் மார்கன், வோக்ஸ் டக் அவுட்). ஆஸி. பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 4, ஜான்சன் 3, ஹேசல்வுட் 2, பாக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். 95 ரன் விளாசியதுடன், 4 விக்கெட்டும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்த மேக்ஸ்வெல் ஆட்ட  நாயகன் விருது பெற்றார். 112 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா முத்தரப்பு தொடரை கைப்பற்றி ‘கார்ல்டன் மிட்’ கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் மிட்செல்  ஸ்டார்க் தொடர் நாயகன் விருது பெற்றார்.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards

Like Us on Facebook Dinkaran Daily News