நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது: தெலுங்கு வாரியர்ஸ்

Date: 2015-02-01@ 18:53:57

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி: சென்னை ரைனோஸை வீழ்த்தி தெலுங்கு வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை 7  விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னையில் பிருத்வி 31, விக்ராந்த் 23,  ஜீவா, விஷ்ணு, சாந்தணு தலா 21 ரன்கள் எடுத்தனர். 133 ரன் இலக்குடன் களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி 11 பந்து எஞ்சிய நிலையில் வெற்றி  பெற்றது.  தெலுங்கு வாரியர்ஸின் ஜோஷி 37, பாபு 34, அக்கினேனி 33 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

Like Us on Facebook Dinkaran Daily News