SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவசரம் கூடாது

2015-01-31@ 01:17:11

இலங்கை தமிழர்கள் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் தற்போது தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக உள்ளனர். இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்று, இன்னும் ஒரு மாதம் கூட முழுதாக நிறைவடையவில்லை. அதற்குள் இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புவது குறித்த, இந்திய அரசின் இந்த அறிவிப்பு, அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு மங்கள சமரவீரா, தனது முதல் அரசு பயணமாக டெல்லி வந்தார். டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் மத்திய அரசு, இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த, இலங்கையின் தற்போதைய புதிய அரசு விரும்பினால், அது வரவேற்கத்தக்கதே. இரு கை தட்டினால்தான் ஓசை. அதற்கு இந்திய அரசும் கை நீட்டலாம். அதிலும் தவறில்லை. ஆனால் இலங்கையில் தற்போது வசிக்கும் தமிழர்களின் நிலை, சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது கசப்பான உண்மை. 2ம் தர குடிமக்களாக கூட அவர்கள் நடத்தப்படவில்லை. முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களால் இன்னமும் முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை.தமிழர்களின் பூர்வீக பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றம் செய்வது, அவர்களின் அடையாளங்களை அழித்தொழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் புதிய அதிபர் பொறுப்பேற்றதும் அடியோடு நின்று விட்டதா என்ன? தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து, புதிய அரசு திட்டவட்டமாக ஏதும் அறிவிக்காத வரையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது என்பது நிச்சயம் நியாயமான நடவடிக்கையாக இருக்காது.

இலங்கையில் இருந்து வாய் வார்த்தைகளாக வரும் அறிவிப்புகளின் அடிப்படையில், இந்திய அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுத்து விடக் கூடாது என்ற பதற்றத்தில் உள்ளனர் அகதிகள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து, படிப்படியாக ராணுவம் விலக்கிக் கொள்ளப்படும் என்று புதிய அரசு பொறுப்பேற்றதும் அறிவித்தது. அந்த அறிவிப்பு என்ன ஆனது? இதையெல்லாம் இந்திய அரசு முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சி   

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
sms spy app read spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog
my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

 • puyal

  கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்