பல்சர் 150 என்.எஸ் என்ற இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்

Date: 2015-01-28@ 18:04:09

பஜாஜ் நிறுவனம்  பல்சர் என்ற பெயரிலேயே பல இருசக்கர வாகனங்களை தயாரித்துள்ளது. தற்போது 150 பல்சருக்கு பதிலாக புதிதாக பல்சர் 150 என்.எஸ் என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிதாக அறிமுகப்படுத்தும் பல்சர் 150 என்.எஸ், பல்சர் 200 என்.எஸ் போலவே இருக்கும். இதில் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் உள்ளது. ஒரு சிலிண்டர் கொண்ட வாகனம், காற்றினால் குளிறுட்டப்படும் இயந்திரம் உடன் 3 ஸ்பார்க் ஃப்ளக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது .15பி.எச்.பி. திறன் கொண்டது. பல்சர் 200சிசி-க்கு பதிலாக 200என்.எஸ். அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News