மனிதர்களின் உணர்வுகளை கண்டறியும் pplkpr அப்ளிக்கேஷன் அறிமுகம்

Date: 2015-01-28@ 17:57:18

உங்களுடைய சமூக வட்டாரங்களில், உங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிடும்போது, உங்களை சமாதனப்படுத்தும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார்களா அல்லது உங்களுக்கு தீங்கு எண்ணம் விளைவிக்க கூடியவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய ஒரு புதிய அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு மாறுபட்ட உணர்வுகளை கொண்ட மனிதர்களின் உணர்வுகளை சரியாக உணர்ந்து, அவர்களை விட்டு விலகினால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை இந்த அப்ளிக்கேஷன் உங்களுக்கு உணரவைக்கிறது.

இந்த இலவசமான ஐஓஎஸ் அப்ளிக்கேஷனை புரூக்ளின் அடிப்படை கலைஞர்களான கைல் மெக்டொனால்ட் மற்றும் லாரன் மெக்கார்த்தி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் இந்த அப்ளிககேஷனை கார்னெகி மெலன் பல்கலைக்கழக மாணவர்களிடம் சோதிக்கப்பட்டது. இந்த அப்ளிக்கேஷனை pplkpr என்று அழைக்கப்படுகிறது, 'பீப்பிள் கீப்பர்' என்று உச்சரிக்கப்படுகிறது, இதில் உங்களை சுற்றியுள்ள மனிதர்களின் உணர்ச்சிவயப்பட்ட நிலையின் நுட்பமான மாற்றங்களை கண்காணிக்க இதய துடிப்பு மானிட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது. எந்த ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட இதய துடிப்பு மானிட்டர் கொண்டு Pplkpr அப்ளிக்கேஷனை இணைக்கலாம், என்றாலும் சோதனையின் போது மாணவர்களுக்கு மியோ சாதனங்கள் வழங்கப்பட்டது.

இது இதய துடிப்பின் மாற்றத்தை கண்காணித்து, அவர்கள் எப்படி உணர்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் மற்றும் யாருடன் இருக்கிறார்கள் என்பதை யூசர்களிடம் சொல்லும். இந்த அப்ளிக்கேஷனில் அல்காரிதம் உள்ளமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இதய துடிப்பு மாற்றங்களையும், உணர்வுகளையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த அப்ளிக்கேஷன் பட்டியலில் இருந்து, மக்களில் யார் சந்தோஷமாக இருக்கிறார்கள், யார் அமைதியாக இருக்கிறார்கள், மற்றும் மிகுந்த பயம் அல்லது மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் போன்றவற்றை இந்த அப்ளிக்கேஷன் கண்காணிக்கிறது. டெவலப்பர்களின் கருத்துகள்படி, இந்த அப்ளிக்கேஷன் பல நன்மைகளை கொண்டுள்ளது. அதாவது, மன அழுத்தம் இருக்கும் காலங்களில் எந்த நண்பர்களை தவிர்க்க வேண்டும் என்பதை வெளியப்படுத்துகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News