தண்ணீரால் நிரப்பப்படும் பலூன் தீயினால் வெடிக்காது

Date: 2015-01-28@ 17:25:08

காற்றினால் நிரப்பப்படும் பலூன் நெருப்பில் காட்டும் போது டமால் என்று வெடிப்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் தண்ணீரால் நிரப்பிய பலுனை நெருப்பில் காட்டினால் என்ன ஆகும் என்று தெரியுமா? ஒரு பலூனில் தண்ணீரை நிரப்பி முடிச்சுப் போட்டு கட்டுங்கள். மெழுகுவர்த்தியின் ஒரு அடிக்கு மேலே இருந்து தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை மேலிருந்து சுடருக்கு அருகில் கொண்டு வாருங்கள்.  பலூன் வெடிக்காமல் பலூன் அடிப்பாகத்தில் கரி படிந்திருப்பதைப் பார்க்கலாம்.

இதற்கு காரணம் என்ன?
தண்ணீர் உள்ள பலூனைச் சூடுபடுத்தும்போது,  பலூனுக்குக் கொடுக்கப்படும் வெப்பத்தைப் பலூனுக்குள்ளே இருக்கும் தண்ணீர் உள்வாங்கிக் கொள்கிறது. இதனால், பலூனுக்குள் வெப்பம் செல்லாமல் அது இளகி வெடிப்பது தடுக்கப்படுகிறது. குளிர்ந்த நீர் மென்மேலும் வெப்பத்தை ஏற்றுக் கொள்வதால் பலூன் வெடிப்பதும் இல்லை. மெழுகுவர்த்தி சுடரிலிருந்து வரும் கார்பன் துகள்கள் பலூனில் படிந்து  அடிப்பாகம் கரி பிடிக்கிறது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test

Like Us on Facebook Dinkaran Daily News