SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வகுப்பறைகளில் அதிகரிக்கும் வன்முறை - மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

2015-01-28@ 15:25:09

கல்வியின் தரம் மாறிவிட்டதா? அச்சத்தில் உறையும் ஆசிரியர்கள்

பெரியோர்களை மதித்து நடத்தல், சக மாணவர்களுடன் ஆரோக்கியமான போட்டிகளில் ஈடுபடுதல், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நாவடக்கம் பேணுதல் போன்றவை குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் பல சட்டதிட்டங்கள் இருக்கும், அது மாணவனுக்கு குருவால் அறிவுறுத்தப்பட்டிருக்கும், உதாரணமாக சில குறிப்பிட்ட கட்டளைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியிருக்கும். குருகுலத்தில் இருந்து வெளிவரும் மாணவனே நாட்டிற்கு நல்லதொரு குடிமகனாகவும் வீட்டிற்குப் பயனுள்ளவனாகவும் இருந்தான் என்பது வரலாறு உணர்த்தும் உண்மை.

கடந்த தலைமுறை வரைக்கும் கல்வி முறையில் சிறந்த ஒழுக்கமும், அறிவு மரபும் இருந்தது.
ஒழுக்கம், அன்பு, பரிவு, அறிவு, கடமை ஆகியவற்றை உணர்ந்து கொள்ளும் இடமாக வகுப்பறைகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு வகுப்பறைகள் வன்முறை களமாக மாறி உள்ளது. வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை தாக்குவது, பெண் ஆசிரியர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது, அவர்களிடம் அத்துமீறி நடப்பது, சக மாணவ தோழிகளிடம் தவறுதலாக நடந்து கொள்வது என்று வகுப்பறையின் சூழல் மாறிவிட்டது.

வகுப்பறையில் பாடம் நடத்தும்போது சகமாணவனுடன் பேசுவது, அரட்டை அடிப்பது, ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போது எழுந்து வெளியே செல்லுதல், ஆசிரியரை மதிக்காமல் நடப்பது போன்றவை இன்றைக்கு வகுப்பறையில் நடக்கும் சில உதாரணங்கள். மேற்கத்தியக் கல்விமுறையில் பயின்று வெளிவந்த எமது தமிழ்ப் பிள்ளைகளைப் பாருங்கள், அவர்களில் எத்தனை பேருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன இருக்கிறது? இருந்தால் எவ்வளவு வீதம் இருக்கிறது என்று சோதித்துப் பாருங்கள், மேற்கத்தியக் கல்விமுறை நமக்கு தெரிந்துவிடும்.

மாணவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரியோர்களை மரியாதை அளிக்காமல், நாவடக்கம், ஆரோக்கியமான போட்டி, பண்பாக நடந்து கொள்ளுதல் போன்ற நன்நடத்தை இல்லாவிட்டால் அம்மாணவனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் ஏன் உலகிற்கும் என்ன பயன்?

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கு மாறாக ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர். வகுப்பறைக்கு மது குடித்துவிட்டு செல்வது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது மேலும் வகுப்பறையில் உள்ள மாணவிகள், மாணவர்களை கிண்டல் செய்வது போன்றவை நடக்கிறது. வகுப்பறையில் மாணவர்களுக்கு நடக்கும் சிறு சிறு சண்டைகள் தற்போது கொலைவெறி தாக்குதலாக மாறி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் விருதுநகரில் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்த மாணவனை மற்றொரு மாணவன் வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்தான். அந்த மாணவன் அளித்த வாக்குமூலத்தில் ஓரினசேர்க்கை மறுத்தால் கொலை செய்ததேன் என்று கூறினான். இந்த சம்பவம் மறைவதற்குள் மற்றொரு மாணவனை பள்ளிலேயே கொலை செய்த சம்பவம் அரங்கேறியது.

நவம்பர் 27ம் தேதி வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஒரு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்2 வகுப்பறையில் மாணவன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடி மற்றும் பெயரை எழுதியதாக தெரிகிறது. இதை பார்த்த சக மாணவன் 'ஏன் இந்த கட்சியின் கொடி மற்றும் பெயரை ஏழுதுகிறாய்' என கேட்டுள்ளார்.

கொடியை வரைந்த மாணவனுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் 'நாங்கள் வரைவோம், இதை ஏன் நீ கேட்கிறாய்' என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினர். இச்சம்பவம் பள்ளி முழுவதும் தெரிந்ததால் பள்ளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனே தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பிரச்னை செய்த மாணவர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்து எச்சரித்தனர். இதை தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். பள்ளிக்கு வெளியே வகுப்பறையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் நண்பர்கள் மற்றும் சிலர் ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது ஒருபுறம் இருக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குறிப்பிடுகின்றன. தாய், தந்தை பிறகு குருவிற்கு அதிக மரியாதை வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களுடன் மாணவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றன. ஆனால் அவர்களையும் ஒருமையில் பேசுவது, கேலி கிண்டல் செய்து போன்ற பல் காரியங்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். மாணவர்களை தண்டிக்கும் போது ஆசிரியர்கள் மீது கொலைமுயற்சி மற்றும் தாக்குதல் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி ஆசிரியரை வகுப்பறையில் குத்தி கொலை செய்த சம்பவம் ஆசிரியர்களிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பாஸ்கர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து மாணவன் பள்ளி வளாகத்தில் விசில் அடித்ததால் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மாணவனை அடித்ததாக மாணவன், நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தான்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் பள்ளிக்குள் அதிரடியாக புகுந்து உடற்கல்வி ஆசிரியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கதைகளை சொன்ன தாத்தா, பாட்டி எங்கே?

கூட்டுக்குடும்பம் என்றால் தாத்தா பாட்டி முதல் சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என உறவுகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் உறவினர்கள் நடந்து சென்றால் கூட அவர்கள் யார் என்பது தெரிவதில்லை. எது நன்மை? எது தீமை? என்று தாத்தா, பாட்டி கதை கதை சொல்வார்கள். அந்த கதையில் அன்பு, பாசம், மனிதநேயம், மற்றவர்களுக்கு உதவும் மனபான்மை சொல்லி வந்தனர்.

ஆனால் தற்போது அந்த உறவுகள் எல்லாம் பாரமாக மாறி போனதால் பெற்ற பிள்ளைகளை அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இதனால் இயந்திர உலகில் உள்ள வாழும் மனிதர்கள் பெற்ற பிள்ளைகளை கவனித்துக்கொள்வதும் இல்லை. இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையே பாசம் குறைந்து வருகின்றது என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிகிறது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2017

  12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்