காதலியை கவர்ந்திழுக்க புட்டிங் கேக் கொடுங்கள் !

Date: 2015-01-27@ 12:52:24

இந்த காலகட்டத்தில் காதல் அனைத்து தரப்பு மக்களிடமும் எளிதாக வந்து விடுகிறது. உதாரணமாக தற்போது பள்ளி செல்லும் மாணவ மாணவிகள்  முதல் 60, 80 வயதாகும் பாட்டி தாத்தா வரை அனைவரிடத்திலும் காதல் இன்றியமையாததாக உள்ளது. யார் யாருக்கு எப்போது காதல் வரும் என்று  சொல்வது மிகவும் கடினமாகும். காதல் இப்படி இருக்க காதலிக்கும் பெண்ணை கவர்ந்திழுக்கவும், சந்தோசப்படுத்தவும் இளைஞர்கள் பலரும்  தலைவலிக்க யோசிக்க வேண்டியதுள்ளது.

பெண்களுக்கு பிடித்த வகையில் அல்லது உயர்ரக பரிசு பொருட்களை வாங்கி அன்பளிப்பாக வழங்கினாலும் கூட, பல நேரங்களில் இந்த முயற்சிகள் தோல்வியடைகிறது. நம் நாட்டில் இப்படி இருக்க மற்ற நாடுகளில் காதல்களை ஒன்றிணைக்க ஒரு புட்டிங் கேக் போதும் என்று கூறுவது வியப்பளிக்கிறது.

இதற்கான நடந்தப்பட்ட ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. புட்டிங் கேக் என்பது சாக்லைட் கீரிம் நிறைந்த கேக்குவகை ஆகும். இவை வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு கேக் போன்று இருக்கும். ஆனால் அதன் உட்புறத்தில் சாக்லெட், பழங்கள் கலந்த கிரீம், ஐஸ்கிரீம் வகைகள்  போன்றவை இருக்கும்.

இவை பொதுவாக கேக் பேக்கிங் முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன. சில நாடுகளில் மட்டும் கேக்குகள் குளிர்விக்கப்பட்டு, ஐஸ்கிரீம் நிறைந்த  புட்டிங் கேக்குகளாக கிடைக்கின்றன.

இந்த வகையான புட்டிங் கேக்குகள் விதவிதமான பழச் சுவைகளில் தயாரிக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெண்ணிலா, பட்டர்ஸ் காட்ச், பைனாப்பிள் போன்ற சுவைகளிலும், இதர பண்டிகைகளுக்கு  திராட்சை, ஸ்டாபெரி, புளூபெரி, சாக்லெட் போன்ற சுவைகளிலும் இந்த கேக் தயாராகிறது.

இதில் சாக்லெட் சுவையில் உருவாகும் கேக்குகள் தான் காதல் ஜோடிகளுக்கென அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புட்டிங் கேக் குறித்த ஆராய்ச்சியில், 155 காதல்  ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆராய்ச்சியில் இனிப்பு சுவை மிகுந்த உணவுகளை உட்கொண்டவர்களின் ‘டோபமைன்’ விகிதங்கள்  அதிகரித்து இருந்தன. டோபமைன் அளவு என்பது மூளை நரம்புகளில் சுவையினால் ஏற்படும் சமிக்ஞைகளை குறிப்பிடுவதாகும். இனிப்பு சுவையால் காதல் உணர்வுகளை  தூண்டும் சமிக்ஞைகள் தூண்டப்படுகின்றன என்று கண்டறிந்தனர்.

அதிலும் குறிப்பாக புட்டிங் கேக்குகளில் இருக்கும் கிரீம் வகையிலான சாக்லெட்கள் என்றால் காதலின் உணர்வுகள் வெகுவாக அதிகரித்துள்ளனவாம். இந்த முடிவு பலகட்ட சோதனைகளுக்கு பின்னரே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வெளிநாடுகளில் ‘புட்டிங் கேக்’ காதல் உணவாகவே  ருசிக்கப்பட்டு வருகிறது.

sms spy app read spy apps free
prescription coupon card go viagra online coupon
sinemet go sinemet
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicilline amoxicillin amoxicillin nedir

Like Us on Facebook Dinkaran Daily News