SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபரீதத்தை எட்டும் வேலைச்சந்தை - ஹாட் ஸ்பாட்

2015-01-27@ 10:08:07

வேலையில்லா திண்டாட்டம் போய், வேலைக்கு ஆள் கிடைக்காத திண்டாட்டம் களைக்கட்டியது. இன்று வேலைச் சந்தை மிகுந்த உற்சாகத்தில் திளைக்கிறது. 'கிங் மேக்கர்களாக' வலம் வந்த சூப்பர் ஜீனியஸ் மூளைக்காரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களை துரத்தி விட்டு, எதுவும் தெரியாத, எதிர்க்கேள்வி கேட்காத 'யங் எனர்ஜிகளுக்கு' ரத்தினக் கம்பளம் விரிக்கிறது. பொறியியல் மோகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலைச் சந்தைகளில் தூக்கி எறியப்பட்ட இளைஞர்கள், அலுவலக உதவியாளர் வேலையாக இருந்தாலும் போதும் என எந்த சம்பளத்துக்கும் வேலை செய்யத் தாயாராகி விட்டனர்.

இந்தியாவில் எத்தனை கோடி இளைஞர்கள் இருந்தாலும், அத்தனை அறிவாளிகளும் எப்படிப் பயன்படுத்தப்பட உள்ளனர் என்பதில் தான் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஒளிந்திருக்கிறது. வெகு தீவிரமாக உழைக்கும் அறிவு, குறைந்த சம்பளத்துக்கு அடகு வைக்கப்படுகிறது. அனுபவம் ஏற்றப்பட்ட மூளைகள் பழைய இரும்புக் கடைகளுக்கு செல்கிறது. இதே நிலை நீடித்தால், வேலைச்சந்தை சந்திக்கும் குழப்பம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெடி வைக்கும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இன்றைய இளைஞர்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் நிறுவனங்களால் தூக்கி எறியப்பட வாய்ப்புள்ளது. பத்து ஆண்டுகளுக்கு பின்னர், ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே உள்ளது. படித்து முடித்த உடன் ரிஸ்க் எடுக்க இளம் மூளைகள், தங்களை தயார் படுத்திக்கொண்டால் 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் அளவுக்கு வளர்ந்து நிற்க முடியும். தனக்கான வேலைப்பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இது போன்ற அபாய எல்லைகளை அறிவுப் பூர்வமாக கடந்து விட 'யங் எனர்ஜிகளுக்கு' சுய தொழில் என்ற அற்புத வாய்ப்புகள் காத்திருக்கிறது. பள்ளிக் காலத்திலேயே இதற்கான மனநிலையை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். படிக்கும் போது வேலைக்கான அனுபவங்கள் வளர்க்கப்படுவது அவசியம். வாய்ப்புள்ள வரை படிப்பு, படிப்பை முடித்த உடன் சமூகம் சார்ந்த தேவைகளை மனதில் வைத்து, புதிய தொழில்களை படைக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் 40 வயதைத் தாண்டியவர்களை வழியனுப்பி வருகிறது. அரசு நிறுவனங்கள் பலவும் தனியார் மயமாவதற்கான களத்தில் சட்டங்களும் மசோதாக்களும் மாற்றப்பட்டு வருகிறது. நீங்கள் உயிர்வாழ்வதற்காக இழுக்கும் ஆக்சிஜனும் தனியார் மயமாகிவிட வாய்ப்புள்ளது. தனியார் மயமாதலின் ஒரே நோக்கம் லாபம், லாபம் மட்டுமே. லாபத்தை காப்பாற்றிக் கொள்ள, எந்த விதமான கத்தியும் எப்போது வேண்டுமானாலும் உங்களது கழுத்து வரை நீளலாம்.

இன்னும் சில நாட்களில் வேலை இழந்து வீதியில் நிற்போர் வரிசையும் நீள இருக்கிறது. அவர்களை நம்பி வாழும் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் சமூகம் என அனைத்தும் மிகப்பெரிய கேள்விக்குறியை தங்களது தோள்களில் சுமந்து நிற்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. இது வேலைச் சந்தை சந்தித்திருக்கும் குழப்ப நிலைக்கும் பொருந்தும். நெருக்கடிகளே மிகப்பெரிய மாற்றங்களுக்கு அஸ்திவாரம் இடுகிறது.

இன்று சமூகம் சந்திக்கும் விடையில்லா கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். பெரும் பிரச்னைகள் தீர்வுக்கு நகரலாம். எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வலிமையை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். வா பார்க்கலாம் என பிரச்னையை விருந்துக்கு அழையுங்கள். அமரவைத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள். அடுத்த என்ன செய்யலாம் என்பதில் மட்டும் தீவிரம் காட்டுங்கள். வேலைச் சந்தை மீண்டும் உங்கள் பின்னால் வாலை ஆட்டிக் கொண்டு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

plavix plavix 300 plavix plm
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2017

    23-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்