SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிறைவேறுமா கனவு?

2015-01-27@ 00:57:09

மூன்று நாள் பயணமாக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இரண்டாம் நாளான நேற்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை பார்த்து  வியந்து  போனது நமக்கு பெருமை தரத்தக்கது. அவர் வியந்தது ஒன்று, இந்திய ராணுவ பலம்; இரண்டாவது, அரிய கலாச்சார பெருமை. மாலையில் தேநீர் விருந்துடன் இந்திய - அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைவர்களை மோடியுடன் அவர் சந்தித்தார். ஒபாமா வந்ததன்  மூலம்  இந்தியாவுக்கு, அதன் வர்த்தகம், பொருளாதாரத்துக்கு பலன் இருக்குமானால் இந்த கூட்டத்தில் எதிரொலித்த விஷயங்கள், அதற்கு  முக்கியத்துவம்  வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜ ஆட்சி வந்ததில் இருந்து வெளிநாட்டு முதலீடு கொட்டப்போகிறது என்று எதிர்பார்த்தது பெரிய அளவில்  கைகொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

வெளிநாட்டு முதலீடு குவிவது இன்னமும் கனவாகவேதான் இருக்கிறது. இதை  நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடியும் எதிரொலித்தார்.  எங்களின் கனவு மிகப்பெரிது தான்; ஆனால், இந்தியாவில் வாய்ப்புகளும் அதிகம் என்று சுட்டிக்காட்டினார். இந்திய வளங்களை பயன்படுத்தி  முதலீடு குவிக்க வேண்டும் என்பது தான்  அவரின் வேண்டுகோள். இந்தியாவில் முதலீடுகளை குவிக்க இயலாத வகையில் உள்ள தடைகளை  தொழில் அதிபர்கள் எடுத்துரைத்தனர். ‘இதுவும் எங்களுக்கு புரிகிறது. நாங்கள் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக  கூறிவிட்டனர் என்பதையும் மோடி ஒப்புக்கொண்டார். இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதை பார்த்து பூரிப்பது மட்டுமல்ல,  அமெரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்வதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று ஒபாமா சொன்னது இந்திய தொழிலதிபர்களுக்கு ஊக்கத்தை  தந்தது.

அமெரிக்க முதலீடுகளை பெறும் நாடுகள் வரிசையில் ஆறாவதாக உள்ளது இந்தியா; வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 50  ஆயிரம் கோடி டாலராக உயர வேண்டும் என்ற ஆதங்கம் நம்மிடம் உள்ளது.  இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள வர்த்தகம் அளவு இப்போது 6100  கோடி டாலர். படிப்படியாக இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு பெருகினால் அடுத்த சில ஆண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி புதிய பாதையில்  பயணிக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

sms spy app click spy apps free
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
rite aid load to card coupons centaurico.com rite aid store products
abilify and coke abilify maintena abilify and coke

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2017

  26-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • aerospike_rocket

  செயற்கைக்கோள் ஏவுதல்களில் புரட்சியை உண்டாக்க இருக்கும் ஏரோஸ்பைக் ராக்கெட் - சோதனை ஓட்டத்திற்கு தயார்!

 • chanceller_angel_4

  ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் 4வது முறையாக ஆட்சியைப் பிடித்தார்

 • silentgarbadance

  நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அமைதி கர்பா நடனம்: காதில் ஹெட்போனை அணிந்து புதுவித கொண்டாட்டம்

 • hurricanemariyastorm

  மரியா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பழமையான அணை: நீர் வெளியேறுவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தீவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்