SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீரமைக்க வாய்ப்பு

2015-01-25@ 01:36:14

ஐபிஎல் தொடரில் எழுந்த கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியம் தன்னை சுய பரிசோதனை செய்து சீரமைத்துக் கொள்ளும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஐபிஎல் அணிகளின்  உரிமையாளர்களாகவும் இருக்க வகை செய்யும் சட்ட திருத்தங்களை அடியோடு நிராகரித்துள்ள நீதிபதிகள், இந்த சர்ச்சையின் மூலகாரணமாக,  பிரதான வில்லன் ஆக அவற்றை வர்ணித்துள்ளனர். வர்த்தக ரீதியிலான, லாப நோக்கம் கொண்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோர், கிரிக்கெட்  வாரிய நிர்வாக பொறுப்பில் இருக்க முடியாது என்று உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளதற்கு ரசிகர்கள் தான் காரணம். களத்தில் நடக்கும் ஆட்டம் நேர்மையானதாக இல்லை என்று  அவர்கள் நினைக்கத் தொடங்கினால், அந்த நொடியிலேயே கிரிக்கெட்டின் அழிவு ஆரம்பமாகிவிடும். கிரிக்கெட் வாரியம் என்பது தனிப்பட்ட அமைப்பு  இல்லை. நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டது என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். முகுல் முத்கல் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்  செய்வதற்கும், கிரிக்கெட் வாரிய நடைமுறைகள் வெளிப்படையானதாக அமையும் வகையில் அதன் விதிமுறைகளை ஆய்வு செய்யவும் மூன்று  நீதிபதிகள் அடங்கிய குழுவையும் நியமித்துள்ளனர்.

இன்னும் 6 வாரத்தில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த குழு அளிக்கும் விசாரணை அறிக்கை,  கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியவர்களுக்கான தண்டனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின்  எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு எதிரானதாகவும், கிரிக்கெட் வாரியத்தின் உரிமையில் தலையிடுவதாகவும் கருதுவது  சரியல்ல. நிர்வாக சீர்கேட்டால் சரிந்து கிடக்கும் இமேஜை சீரமைத்துக் கொள்ள கிடைத்த, நல்லதொரு வாய்ப்பாகவே இதை பயன்படுத்திக் கொள்ள  முன்வர வேண்டும்.

எந்த ஒரு சர்ச்சைக்கும், சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் நிர்வாகிகள் தேர்தலை முறையாக நடத்தி, ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க  பிசிசிஐ கடமைப்பட்டுள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு நிர்வாக அமைப்பு என்ற பெருமை மட்டுமே போதாது. இனி எடுக்கும் ஒவ்வொரு  நடவடிக்கையும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், வீரர்களின் நன்மைக்காகவும் மட்டுமே என அமைய வேண்டியது அவசியம். இந்த அக்னி  பரீட்சையில், பிசிசிஐ பீனிக்ஸ் பறவையாய் சிலிர்த்தெழுந்து சிறகடிக்கும் என நம்புவோம்.

cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Like Us on Facebook Dinkaran Daily News
  • pORINgrainTAMIL

    கொட்டும் மழை, பனியிலும் பொங்கும் தமிழ் உணர்வு: ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் விடிய விடிய போராட்டம்

  • TnROCLKEd10LAKHppp

    மெரினாவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர் : தமிழகம் குலுங்கியது

  • 21-01-2017

    21-01-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afDSTADuimSTUDraileINformbull

    ஜல்லிக்கட்டு நடத்தகோரி புதுச்சேரி ஏஎப் டி மைதானத்தில் மாணவர்கள் காளை வடிவில் அணிவகுத்து நின்றனர்

  • CHILdreanSUPPORTAJAILKATTU

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்