SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது சரி தானா?

2015-01-23@ 01:51:20

மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மட்டும் கூடுதல் கலால் வரியை உயர்த்தி வருகிறது. ஆனால், விமான எரிபொருளுக்கு கலால் வரி உயர்த்தப்படவில்லை. விசித்திரமான இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்கள்தான். பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதால் கிடைக்கும் வருவாயால், மானியச் சுமையால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்ற வகையில் பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர். கூடுதல் கலால் வரிச்சுமை, மக்கள் மீது ஏற்றப்படவில்லையே என்று சால்ஜாப்பு சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த வரியை சுமத்தாமல் இருந்தால், அந்த பலனும் மக்களுக்கு கிடைத்திருக்கும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ‘‘சாதாரண மக்களின் மீது சுமை ஏற்றப்படுகிறது; பணக்காரர்கள் மீது மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கரிசனம்’’ என்றெல்லாம் அடுக்குமொழி வசனங்களில் பாஜ தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்களும் அதே பாதையைத்தான் பின்பற்றுகின்றனர். விமான எரிபொருளுக்கு எவ்வளவு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டாலும், பணக்காரர்களால் அதை சமாளிக்க முடியும். ஆனால், பெட்ரோல், டீசல் வரியால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்கள்தான். சர்வதேச சந்தையில் இவற்றின் விலை குறைந்தபோதும், அதன் பலன் முழுமையாக மக்களுக்கு அளிக்கப்படாமல் தடுப்பது இந்த கூடுதல் வரிச்சுமைதான். பெட்ரோல், டீசல் சுமைதான், விலைவாசி பெருமளவில் உயர காரணமாக இருந்ததை இப்போதைய ஆட்சியாளர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது, சுமை தானாகவே குறைந்து வந்தபோதும், அதை முழுமையாக மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசே, குறுக்கே அணைபோடுகிறது.

ஏற்கனவே, மானியங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியிருக்கிறார். ஆட்சிக்கு வரும் வரையில், மக்களுக்கு சாதகமாக தேன்தடவிய பேச்சு; ஆட்சிக்கு வந்தபின்னர் வேப்பங்காய் குளியல் என்ற ரீதியில் மத்திய அரசு நடந்து கொள்வதை பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. பணக்காரர்கள் மீது காட்டும் அக்கறையை, இருசக்கர வாகனத்தில் நாள் முழுவதும் சென்று உழைக்கும் ஏழைகளையும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்