2015ம் ஆண்டின் சூரியனின் முதல் சூரிய கிளரொளி - நாசா வெளியீடு

Date: 2015-01-14@ 10:43:36

2015ம் ஆண்டின் சூரியனின் முதல் சூரிய கிளரொளி காணப்பட்டது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெடித்து சிதறிய நிகழ்வினை நாசா படம்பிடித்துள்ளது-. இந்த சூரிய கிளரொளி வெடித்து சிதறுவதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் இந்த கதிர்வீச்சு இன்னும் பலமாய் வெடித்துச் சிதறுவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. இந்த படம், சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியால் எடுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட நிகழ்வை M5.6 வகுப்பு கிளரொளி என்று வகைப்படுத்தியுள்ளதனர்.

X வகுப்பு சூரிய கிளரொளி போன்ற மிக தீவிரமான சூரிய கிளரொளியின் அளவை விட பத்து மடங்கு பெரியதாகும் இந்த M வகுப்பு கிளரொளி. அந்த கிளரொளியின் எண்கள், அதன் வலிமை பற்றிய தகவல்களை மேலும் வழங்குகிறது. அதாவது, M1 தீவிரமான சூரிய கிளரொளியை விட M2 இருமடங்கு பெரியதாகும், அதேபோல் M3 தீவிரமான சூரிய கிளரொளி மூன்று மடங்கு பெரியது மற்றும் பல... சூரிய கிளரொளி மிகவும் வலிமைவாய்ந்த கதிர்வீச்சுகளை வெடித்து சிதறியபோதும், இந்த தீங்கு விளைவிக்கும் கதிர்கள் பூமியின் வளிமண்டலம் வழியாக கடந்து மனிதர்களை உடல் ரீதியாக நேரடி பாதிப்பு எதுவும் எற்படுத்தப்படபோவதில்லை.

எனினும், அவை மேலும் தீவிரமடையும்பொழுது, ஜிபிஎஸ் மற்றும் தகவல்தொடர்பு சிக்னல்கள் பயணம் செய்யும் அடுக்கு வளிமண்டலத்தில் பாதிக்கும். இந்த சூரிய கிளரொளியானது, சூரிய வளிமண்டலத்தில் காந்த சக்தி உருவாகும் போது திடீரென்று வெளியிடும். குறிப்பாக சூரியன் செயலில் இருக்கும்போது அவற்றின் அதிர்வெண் (frequency), ஒரு நாளைக்கு பல முறை மாறுபடுகிறது, மற்றும் சூரியனின் அமைதியான காலங்களில் ஒரு வாரத்தில் இருப்பதைவிட குறைவாகவே இருக்கும். வெளியிடப்பட்ட இந்த ஆற்றலின் அளவு 100 மில்லியன் மெகாடன் ஹைட்ரஜன் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு சமமானதாகும்.

my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy

Like Us on Facebook Dinkaran Daily News