SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு துண்டிக்கப்படும் - இஸ்ரோ

2015-01-08@ 14:20:39

மும்பை: ஜூன் மாதத்தில் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளை துண்டிக்கப்படும். அதனால் 15 நாட்களுக்கு மங்கள்யானுடன் இஸ்ரோவு எந்த தொடர்பும் வைத்துகொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மங்கள்யான் உருவாக்க ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நீண்ட காலத்துக்கு பிறகு முதல் முறையாக 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த 2013 நவம்பர் 5ம் தேதி அன்று ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் அனுப்பியது. 1350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், 66.6 கோடி கிலோமீட்டர் பயணித்து, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி அன்று செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்து நிலைநிறுத்தப்பட்டது. செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால், சிவப்பு கிரகத்தின் பார்வை தடுக்கப்பட்டு ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என்று மங்கள்யானின் திட்ட இயக்குனர் சுப்பையா அருணன் கூறியுள்ளார். மேலும், பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்படும்போது மங்கள்யான் முழுமையாக தன்னாட்சி முறையில் இருக்கும் என்றும் அருணன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று 2016ம் ஆண்டு மே மாதத்திலும் பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்படலாம். ஏனெனில் அப்போது செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரவிருக்கிறது என்றும் சுப்பையா அருணன் குறிப்பிட்டுள்ளார்.

why do husbands have affairs link wife affair
rite aid load to card coupons link rite aid store products
drug coupon card prescription coupons drug discount coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்