தினமும் பூகம்பம்

Date: 2015-01-08@ 10:15:20

பூமியின் பாறைத் தட்டுகளில் பசிபிக் தட்டுதான் மிகப்பெரியது. அமெரிக்காவிலிருந்து தொடங்கி, இன்னொரு பக்கம் ஜப்பான் வரை நீண்டிருக்கிறது. இது எப்போதும் வேறு பல தட்டுகளுடன் உரசிக் கொண்டும், மோதிக் கொண்டும் இருக்கிறது. பூகம்ப வாய்ப்புகள் இந்தப் பகுதியில்தான் அதிகம். இதை 'பசிபிக் நெருப்பு வளையம்' என்று கூறுகிறார்கள். எரிமலைகளும் இந்தப் பகுதியில் அதிகம். இந்த வளையத்தில் இருக்கும் ஜப்பானும், இன்னொரு எல்லையில் இருக்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியும் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் முறைக்கும் அதிகமாக அதிர்கின்றன.

கலிபோர்னியா மக்கள் பூகம்பத்தோடு, 'தினசரி பேப்பர் போட்டுவிட்டுச் செல்கிற பையன்' ரேஞ்சுக்கு பழகி விட்டார்கள். 1994 ஜனவரி 17 அன்று கலிபோர்னியாவைத் தாக்கிய பூகம்பத்தில், பொருளாதார இழப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய். உயிரிழப்போ 60தான். இதே வீரியமுள்ள (6.2 ரிக்டர்) பூகம்பம், 1993ல் மகாராஷ்டிராவிலுள்ள லத்தூரைத் தாக்கியபோது இறந்தவர்கள் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர். இந்த வித்தியாசத்துக்குக் காரணம், முன்னெச்சரிக்கைதான்.

2001ல் குஜராத்தைத் தாக்கியபோது, பூகம்ப வில்லனின் வரவை முன்கூட்டியே சொல்லும் ஜோசியர்கள் பெருகினார்கள். விஞ்ஞானிகளும் அக்கறை காட்ட ஆரம்பித்தார்கள். பூகம்பங்களை முன்கூட்டியே துல்லியமாக அறிவது விரைவிலேயே சாத்தியமாகும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதுவரை பூமி நாட்டியம் ஆடாமலிருக்கட்டும்!

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda

Like Us on Facebook Dinkaran Daily News