SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவில் தண்ணீர் எடுக்க குழந்தைகளை கிணற்றுக்குள் அனுப்பும் துயரம்!

2014-12-31@ 10:51:00

பீட்: மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு ஆபத்தான முறையை  கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற தங்கள் குழந்தைகளை கயிறுகளால் கட்டி சிறிய ஜாடியுடன் அனுப்புகின்றனர். ஆழமான கிணற்றுக்குள் இறங்கி ஜாடியில் தண்ணீர் எடுத்தவுடன் அவரது பெற்றோர்கள் குழந்தைகளை மேலே தூக்குகின்றனர்.

இந்த ஆபத்தான முறையில் தண்ணீர் எடுப்பது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பீட் மாவட்டம் மகாராஷ்டிரா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜ முண்டே தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பெற்றோர்கள் குடிநீர் பெற குழந்தைகள் பள்ளி செல்வதை இழக்க நேரிட்டுள்ளனர். இது குறித்து ஒரு குழந்தை கூறுகையில், இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெற்றோர்கள் எங்களை பள்ளி செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

நாங்கள் தண்ணீர் எடுக்க வெகுதொலைவு செல்லவேண்டும் மேலும் தினமும் நாங்கள் தண்ணீர் எடுக்க கிணற்றுக்குள் இறக்கிவிடப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் அருகில் குடிநீர் மற்றும் வேறு நீர் ஆதாரம் இல்லை. எனவே இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீர் எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். இவ்வாறு செய்தும் நீர் பற்றாக்குறையாக உள்ளது மிகவும் வேதனைக்குரியது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
venlafaxine forum click venlafaxine 150
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
how do abortion pill work pristineschool.com misoprostol abortion

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்