SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிப்ஸ்...

2014-12-30@ 14:36:27

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுகிறோம் என்ற எண்ணம் இருக்கும். இப்படிப்பட்ட மாணவர்கள் தங்களின் மதிப்பெண்ணை உயர்த்தவும், பொதுதேர்வில் எளிதில் வெற்றி கொள்ளவும் சில டிப்ஸ்.

நீங்கள் தேர்விற்கு படிக்கும் போது புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே, படித்த ஒவ்வொன்றையும் எழுதி பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்தது மறக்காமல் இருக்கும்.
நாம் ஒன்றை செய்யும் போது திட்டமிட்டு செய்தால், அது சிறப்பாக அமையும். எனவே, தேர்விற்கு படிப்பதற்கு முன் திட்டமிட்டு படிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு நாளில் எட்டு மணி நேரம் படிக்க திட்டமிட்டால், ஆறு மணி நேரம் படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை நினைவுபடுத்தி பார்க்க பயன்படுத்த வேண்டும். நாம் திட்டமிட்டபடி இந்த பாடத்தை படித்தோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும்.

தேர்விற்கு ஒன்று அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதிதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும். படிக்கும் போது நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது. மேலும், படிக்கும் போது பாடங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக்கொண்டால் ரிவிசன் செய்யும் போது உதவியாக இருக்கும்.

படிக்கும் போது டிவி பார்ப்பது, பிறருடன் பேசுவதை தவிர்க்கவும். இதற்கு பெற்றோர் உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிக்காமல் படுக்கைக்கு செல்லவும். அதிகாலை எழுந்து படித்தல் நல்லது. தேர்விற்கு முந்தைய நாள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை, கைகடிகாரம் என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேர்விற்கு பழகிய பேனாக்களை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் வேகம் கிடைக்கும். கையெழுத்து அழகாகவும் இருக்கும். தேர்விற்கு அவசரமாக செல்லாமல் சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு செல்ல வேண்டும். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு ஆரோக்கியமான காலை உணவை அளவோடு உட்கொள்ள வேண்டும்.

prescription coupon card prescription coupon viagra online coupon
plavix plavix 300 plavix plm
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2020

  26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • speach20

  இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

 • carnival20

  ஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு

 • mariyaathai20

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

 • viloence20

  டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்