SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் சுங்க அதிகாரி கைது 2 கூட்டாளிகளும் சிக்கினர்

2012-05-13@ 02:29:42

சென்னை: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு உள்ளது. வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார். கன்டெய்னர்கள் சோதனையின்போது லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு புகார் வந்தது.     இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்கு, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sms spy app click spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்