வெண்கலக் காலத்தில் விவசாயிகளுக்கு கால மாற்றங்களை அறிய உதவிய ஸ்கை மேப்

Date: 2014-12-23@ 17:03:45

விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் 1999ம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்ட வெண்கல தட்டை கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நெப்ரா ஸ்கை டிஸ்க், சுமார் 1600 கி.மு.வில் மத்திய வெண்கல காலத்தில் வாழ்ந்த மக்களால் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது, மற்றும் இது முதன் முதலாக உருவாக்கப்பட்ட 'ஸ்கை மேப்' என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வெண்கல தட்டு, சுமார் 32செ.மீ விட்டம் கொண்டது, மேலும் தெளிவான சந்திரன் மற்றும் / அல்லது சூரியன் மற்றும் சில நட்சத்திரங்கள் குறிக்கும் வகையில் தங்க திரவத்தினால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் விதைப்பதற்கும் மற்றும் சாகுபடி செய்வதற்கும் மிகச் சிறந்த முறையில் கணிக்க உதவும் கால்குலேட்டராக இந்த ஸ்கை டிஸ்க் இருந்திருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பிளீயட்ஸ் காலத்தில் குளிர்காலத்தில் அம்மாவாசை அன்று இரவு நேரத்தில் வானில் நிறைய நட்சத்திரங்கள் தோன்றினால் அது வசந்த காலம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக எடுத்துக் கொண்டு விதைகளை விதைக்க தொடங்குவார்கள். அதேபோல் பவுர்ணமிக்கு பின்பு நிறைய நட்சத்திரங்கள் வானில் தோன்றினால் அது அறுவடை செய்வதற்கு தகுந்த காலம்¢ என்று எண்ணி அறுவடை செய்ய தொடங்குவார்கள். இவ்வாறாக வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், ஸ்கை டிஸ்கை கொண்டு விதைகளை விதைத்தும், சாகுபடி செய்தும் வந்தனர்.

1999ம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸ்கை டிஸ்கில் இரண்டு வெண்கல வாள், இரண்டு சிறிய அச்சுகள், ஒரு உளி மற்றும் சுழல் போன்று வளையல்கள் உடைய பிளவுகள் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

prescription coupon card prescription coupon viagra online coupon
abilify and coke abilify maintena abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News