SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்குனரை அறைந்தார் ராக்கி சாவந்தின் தோழி : ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக புகார்

2014-12-13@ 00:59:42

மும்பை: படத்தில் நடிக்க வாய்ப்பு தரவேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக திரைப்பட இயக்குனர் மீது குற்றம்சாட்டிய நடிகை ராக்கி சாவந்தின் தோழி அந்த இயக்குனரை பொது நிகழ்ச்சியில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் இளம் இயக்குனர் சச்சேந்திர சர்மா இயக்கத்தில் ‘மும்பை கேன் டான்ஸ் சாலா‘ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆஷீஷ் சர்மா, பிரசாந்த் நாராயண், ஆதித்ய பஞ்சோலி, சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்துடன் அவரது நெருங்கிய தோழி மனீஷாவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி மேடையில் அனைத்து நட்சத்திரங்களுடன் இயக்குனர் சச்சேந்திர சர்மா நின்றவாறு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையில் ஏறிய மனீஷா, இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த காட்சியை பார்த்து அரங்கில் இருந்தவர்கள் திகைத்து போனார்கள். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தான் இயக்கப் போகும் புதுப்படத்தில் நடிக்க வாய்ப்புத்தர  வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சச்சேந்திர சர்மா வலியுறுத்தியதாலேயே அவருக்கு பாடம் புகட்டும் வகையில் அவரது கன்னத்தில் அறைந்ததாக மனீஷா கூறினார். ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை.

ஆனால், இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் தனது தோழி அறைந்தது சரிதான் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறினார். அவர் கூறுகையில், ‘‘மனீஷா செய்தது சரிதான். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்’’ என்றார். ஆனால், மனீஷாவின் நடவடிக்கை ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று இயக்குனர் சச்சேந்திர சர்மா கூறினார். அவர் கூறுகையில், ‘‘அந்த பெண்(மனீஷா) யார் என்றே எனக்குத் தெரியாது. சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடும் புதுமுக நடிகைகள் எல்லாம் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ள விரும்புவது வேதனைக்குரியது’’ என்றார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
why do husbands have affairs women cheat on men wife affair
rite aid load to card coupons centaurico.com rite aid store products


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi1

  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

 • dr

  மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

 • hongkong

  சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

 • jappan

  ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

 • fire

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்