மனித முகங்களைக் கொண்ட பூமி படத்தை உருவாக்கிய நாசா

Date: 2014-12-04@ 11:53:27

இது மனித முகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பூமி படம். ஒவ்வொறு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி புவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாம் வாழும் பூமியை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வை விதைக்கும் நோக்கில் இந்த கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தினத்தில் திறந்தவெளியில் நின்று தங்களை தாங்களே போட்டோ எடுத்து (செல்ப்பி), அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுமாறு உலக மக்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கேட்டுக் கொண்டது. 113 நாடுகளைச் சேர்ந்த 50,000 பேர் தங்களை தாங்களே போட்டோ எடுத்து பதிவேற்றினர். அதிலிருந்து 36,000 படங்களை எடுத்து இந்த பூமி படத்தை நாசா உருவாக்கியுள்ளது.

sms spy app read spy apps free

Like Us on Facebook Dinkaran Daily News