SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குதண்டனை ரத்து மோடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

2014-11-15@ 00:22:27

ராமநாதபுரம் : தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதுடன், இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம்இரவு வந்தார். நேற்று காலை ராமநாதபுரம் எம்ஜி மகாலில் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. காலை8.50 மணிக்கு மகாலுக்கு வந்த ஸ்டாலின், முதலில் மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து இளைஞரணி, நகர், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்பல்வேறு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின்கூறுகையில், ‘‘தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.

இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். திமுக சார்பிலும் தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதோடு, 5 மீனவர்களையும் மீட்டுக் கொண்டுவர திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவார்,‘‘ என்றார்.

plavix tonydyson.co.uk plavix plm

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • jammu_modii111

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

  • AyodhyaDiwali

    அயோத்தி சரயு நதிக்கரையில் 1.75 லட்சம் விளக்குகள் ஒளிவெள்ளத்துடன் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்