SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும

2012-05-05@ 00:22:10

மதுரை : மதுரை ஆதீனம் நிர்வாகத்தில் எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக இந்து அறநிலையத் துறைக்கு புகார் வந்தால், அதில் அரசு தலையிடுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்தார். மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக சாமியார் நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கலான 2 வழக்குகளில் நடந்த விசாரணைக்கு பின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தர்மபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் ஆட்கொணர்வு மனுவும், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் பொதுநல மனுவும் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹரி பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில், ''மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர்.

தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என மூத்த ஆதீனம் தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள கையெழுத்து அவருடையதுதானா என்பதில் சந்தேகம் உள்ளது. நித்யானந்தா மீது பாலியல், வரி ஏய்ப்பு வழக்குகள் உள்ளன. மதுரை ஆதீன நிர்வாகத்தை அரசு எடுக்கவும், ஆதீனத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்றனர்.

அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ''ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’’ என்றார்.

மதுரை ஆதீனம் மற்றும் நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் வீர.கதிரவன், ''இளைய ஆதீனத்தை நியமிக்க மூத்த ஆதீனத்துக்கு அதிகாரம் உண்டு. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. மனுதாரர்கள் விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து, இந்த 2 வழக்குகளில் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

abilify and coke link abilify and coke


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்