SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விதிமுறையை மீறி ஜெகன் தரிசனம

2012-05-03@ 00:36:39

திருமலை: தேவஸ்தான விதிமுறைகளை பின்பற்றாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தவரான ஜெகன் மோகன் ரெட்டி தரிசனம் செய்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். ஆந்திராவில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக திருப்பதியில் நேற்று முன்தினம் இவர் பிரசாரம் செய்தார். நேற்று காலை 8 மணிக்கு திருமலைக்கு சென்று ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் திருப்பதி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கருணாகர ரெட்டியும் சென்றார்.

ஜெகன் மோகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்வதாக இருந்தால், நான் வேறு மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவரை முழுமையாக நம்புகிறேன் என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார். ஜெகன் மோகன் இதை பின்பற்றாமல் தரிசனம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜ. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், ஜெகன் மீது இந்து அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளன.இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம் கூறுகையில், ‘‘ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெகன் மோகனிடம் கையெழுத்து வாங்க பதிவேடு கொண்டு செல்லப்பட்டது. 2009ம் ஆண்டும் பதிவேட்டில் கையெழுத்திட்டு ஏழுமலையானை தரிசித்தேன். எனவே, மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்.

sms spy app phone monitoring software spy apps free
watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்