SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராமங்கள் மேம்பட புதிய திட்டம்: டெல்லியில் நாளை மறுநாள் மோடி தொடங்கி வைக்கிறார

2014-10-09@ 14:07:21

புதுடெல்லி: கிராம மக்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சான்சத் என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தபடி, ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுக்கும் ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா‘ என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் 2018 ஆகஸ்டுக்குள் 7.5 கோடி குடும்பங்களுக்கு வங்கி கணக்கு துவங்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக சுத்தமான இந்தியாவை உருவாக்கும் வகையில் ‘கிளீன் இந்தியா‘ என்ற தேசிய தூய்மை இயக்கத்தை காந்தி ஜெயந்தியான கடந்த 2ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு நாடு முழுவதும் மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிராம பஞ்சாயத்துகளில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வரும் 11ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்க உள்ளார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாள் அன்று நாடு முழுவதும் இத்திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.  3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட கிராம பகுதியிலும், ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட மலை கிராம பகுதியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இங்கு வாழும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், உள்ளிட்டஅடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மக்களவை உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்பணி முடிவடைந்த பின், மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களை கண்டறிந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
அதேபோல் மாநிலங்களவை உறுப்பினர்களும் ஏதாவது கிராம பகுதிகளை அடையாளம் கண்டு வளர்ச்சி பணிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்