SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு : பெற்றோர் உட்பட 8 பேர் கைது

2014-10-04@ 00:45:40

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை எரித்ததாகவும் அவரது பெற்றோர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகள் விமலாதேவி (21), ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவரும் போலிபட்டியை சேர்ந்த டிரைவர் திலீப்குமாரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், விமலாதேவியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். இதில் மனமுடைந்த விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி விஷம் குடித்தார். விமலாதேவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசில் விமலாதேவி தெரிவித்தார். பின்னர் அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் விமலாதேவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்தன.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அவரது பெற்றோரும், உறவினர்களும் சேர்ந்து உடலை எரித்து விட்டனர்.இதுகுறித்து விஏஓ செல்வம் உசிலம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் தாசில்தார் கஜேந்திரன், ஏடிஎஸ்பி கோபால்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். விமலாதேவியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக திலீப்குமார், எஸ்பி விஜயேந்திர பிதாரியிடம் புகார் அளித்தார். இவ்வழக்கை சிறப்பு தனிப்படையினர் விசாரித்தனர்.  
சுடுகாட்டில் விமலாதேவி எரிக்கப்பட்ட இடத்தை எஸ்.பி பார்வையிட்டார்.

அவரது உத்தரவின் பேரில், விமலாதேவியின் தந்தை வீரணன் (48), தாயார் தேனம்மாள்(41), உறவினர்கள் முருகன், இவரது மனைவி தங்கபாண்டியம்மாள், தேனி பூதிப்புரம் குருசாமி மற்றும் இவரது மகன் சதீஷ்குமார்(27), வெட்டியான் பாண்டி, இவரது மகன் சுரேஷ், பக்கத்து வீட்டுக்காரர் விருமாண்டி ஆகிய 9 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததாகவும் உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சதீஷ்குமார் தவிர மற்ற 8 பேரையும் கைது செய்தனர்.

watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated
venlafaxine forum click venlafaxine 150
plavix plavix plavix plm
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்