நம்பினால் நம்புங்கள
2014-09-24@ 10:28:39

*ஒரு டால்பினுக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், மற்ற டால்பின்கள் அதை மேலே தள்ளி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து, எளிதாகச் சுவாசிக்க உதவி செய்யும்.
*டால்பின் தினம் 8 மணி நேரம் வரை உறங்கும். ஆனாலும், அதன் மூளையில் பாதி மட்டுமே ஒரு நேரத்தில் உறங்கும். அதனால் டால்பின் ஒருபோதும் நினைவிழப்பதில்லை!
*மனிதர்களுக்கும் டால்பின்களுக்கும் தகவல்தொடர்பு ஏற்படுத்த, இப்போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பொருள், ஐபேட்!
*சில வகை டால்பின்கள் தேங்காய்களை பந்து போல கேட்ச் பிடித்து விளையாடும்.
*தண்ணீருக்கு அடியில் எளிதாகச் சென்று இரை தேட, டால்பின்களுக்கு ஸ்பெஷலான சூப்பர் சக்தி உண்டு. எகோலொகேஷன் என்ற சோனார் வகையை இதற்காக அவை பயன்படுத்துகின்றன.
*டால்பின்களுக்கு வாழ்நாள் முழுக்கவே ஒரு செட் பற்கள் மட்டுமே முளைக்கும்.
*முதன்முதலாக ஒரு பிங்க் வண்ண பாட்டில்நோஸ் டால்பின் அமெரிக்காவிலுள்ள லூசியானா ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
*ரிஸ்ஸோ டால்பின்களால் 30 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும்.
*‘கில்லர் வேல்ஸ்’ என்று அழைக்கப்படுபவை, கொலைகாரத் திமிங்கலங்கள் அல்ல... உண்மையில் அவை ஒருவகை டால்பின்களே!
*ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்து அடையாளம் காணும் வகையில், பிரத்யேக விசில் சத்தம் உண்டு.
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்