SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரை வெல்ல இந்தியா முனைப்ப

2014-09-02@ 02:06:22

பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து மோதும் 4வது ஒருநாள் போட்டி,  பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை  3.00 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட  தொடரில், முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல்  ரத்தானது. அடுத்து நடந்த 2வது மற்றும் 3வது போட்டியில் அபாரமாக  வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 4வது  ஒருநாள் போட்டி பர்மிங்காமில் இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும்  வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.  டெஸ்ட் தொடரில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, ஒருநாள் தொடரில்  புதிய எழுச்சி பெற்றுள்ள இந்திய அணி ஐசிசி தரவரிசையில் மீண்டும்  தனித்தே நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதால் வீரர்கள் மிகுந்த உற்சாகம்  அடைந்துள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து  வகையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுரேஷ்  ரெய்னாவின் அதிரடி பேட்டிங் மற்றும் துடிப்பான பீல்டிங், மற்ற  வீரர்களையும் சிறப்பாக செயல்பட வைக்கும் வகையில் ஊக்கமளிப்பதாக  அமைந்துள்ளது. பேட்டிங்கில் தடுமாறி வரும் ஷிகர் தவானுக்கு பதிலாக  முரளி விஜய் தொடக்க வீரராக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. காயம்  அடைந்துள்ள மோகித் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவை சேர்ப்பது  பற்றியும் இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி  சேர்க்கப்படலாம். ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற  இந்தியாவும், முதல் வெற்றிக்காக இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால்,  ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியா: டோனி  (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், விராத் கோஹ்லி, அஜிங்க்யா  ரகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு  சாம்சன், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, கரண் ஷர்மா, மோகித்  ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, தவால் குல்கர்னி, புவனேஷ்வர்  குமார். இங்கிலாந்து: அலஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ்  ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர் (விக்கெட்  கீப்பர்), ஸ்டீவன் பின், ஹாரி கர்னி, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ்  ஜோர்டான், இயான் மார்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ்  டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

walgreens promo read free pharmacy discount cards
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion pill procedures farsettiarte.it having an abortion
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்