சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் புதிய மன
2014-08-22@ 16:57:55

பெங்களுரூ: சொத்து குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் குற்றசதி என்ற வார்த்தையை நீக்குவது குறித்து உடனே தீர்ப்பளிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 1997-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததை எதிர்த்து கடந்த 12-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோர் பெங்களுரூ தனி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனு மீதான விசாரணை கடந்த 20-ம் தேதி முடிந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கும் போது இந்த மனு மீதும் தீர்ப்பு வழங்குவதாக தனி நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிவித்திருந்தார். நீதிபதியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் குற்றசதி என்ற வார்த்தையை நீக்க கோரும் மனு மீதான தீர்ப்பை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மனு மீதான விசாரணை வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்
உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல்
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சொல்லிட்டாங்க...
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அமைச்சர் வேலுமணிக்கு மு.க.ஸ்டாலினை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது : மா.சுப்பிரமணியன் கேள்வி
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை