5 பெண்களை ஏமாற்றி திருமணம் பெயின்டர் சிறையில் அடைப்ப
2014-07-29@ 15:19:44

கோவை: ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பெயின்டரை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை குரும்பர் வீதியை அடுத்த ம.ந.க வீதியை சேர்ந்தவர் சக்திவேல்(37). மனைவி மகேஸ்வரி. இவர், நேற்று கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் சீதனமாக 7 சவரன் அளித்தனர். சக்திவேல் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். திருமணமான, சில மாதங்களில் சக்திவேலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி இரவு எனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுக்க துவங்கினார். ஆபாச படங்களில் வருவது போல், செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னரே ஒரு முறை மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தேன்.
போலீசார் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். அதன் பின்னரும், சக்திவேல் செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் சக்திவேலுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நான் அவரை விட்டு பிரிந்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன். இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு, நாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து நான் சக்திவேலிடம் கேட்ட போது, அவர் என்னை தகாத வார்த்தைகளில் திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மேற்கு பகுதி மகளிர் போலீசார் சக்திவேலிடம் விசாரித்தனர். சக்திவேல், மகேஸ்வரியை திருமணம் செய்வதற்கு முன்னரே மேலும் சில பெண்களை திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மேற்கு பகுதி மகளிர் போலீசார் கூறியதாவது: கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும், சக்திவேலுக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. செக்ஸ் வைத்துக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டு சில மாதங்களிலேயே கவிதா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சில வருடங்கள் கழித்து காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரும் சக்திவேலின் செக்ஸ் தொந்தரவை பொறுத்து கொள்ள முடியாமல் சில மாதங்களிலேயே பிரிந்து சென்றுவிட்டார். மூன்றாவதாக கஜலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரும் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின், உறவினர்கள் சேர்ந்து 2013ம் ஆண்டு 4வதாக மகேஸ்வரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். மகேஸ்வரியும் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனிமையில் இருந்த அவர், தனலட்சுமி என்ற பெண்ணை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார். யாரையும் முறையாக விவாகரத்து செய்யவில்லை. முந்தைய திருமணங்களை மறைத்து ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரிந்தது.இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும் செய்திகள்
துப்பாக்கி முனையில் வடமாநில வாலிபரை காரில் கடத்திய கும்பல்: சேலத்தில் இரவில் பரபரப்பு
தடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார்
தாம்பரம், பீர்க்கன்காரணையில் அடுத்தடுத்த வீடுகளை உடைத்து 66 சவரன், 1.7 லட்சம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை
சாப்பாடு சரியில்லை என்ற தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்: திருமங்கலத்தில் பரபரப்பு
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேர் பிடிபட்டனர்: காவலன் செயலி மூலம் நடவடிக்கை
ஐசிஎப் பெண் ஊழியரை ஆபாச படம் எடுத்து மிரட்டியவருக்கு வலை
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்