SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூதாட்டி கொடூர கொலை: 5 பவுன் நகை, வெள்ளிக்காப்பு கொள்ளை

2014-07-28@ 01:47:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதுகளை அறுத்தும், கால்களை  வெட்டியும் மூதாட்டியை படுகொலை செய்த மர்ம நபர்கள், அவர்  அணிந்திருந்த 5 பவுன் நகைகள், வெள்ளிக்காப்பு ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட் டம்  காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன்.  இவரது மனைவி உண்ணாமலை (70). இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் அப்பகுதியிலேயே  தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மகன்கள்  வீட்டிற்கு வந்து பெற்றோருக்கு உணவு கொடுத்து விட்டு சென்றனர்.  உணவை சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள்  தூங்கினர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே உள்ள  கழிப்பறை அருகே வயல் பகுதியில் கால்கள் வெட்டப்பட்டும், காதுகள்  அறுக்கப்பட்ட நிலையி லும் உண்ணாமலை படுகொலை செய்யப்பட்டு  கிடந்தார்.

அவர் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகைகள்,  கால்களில் அணிந்திருந்த வெள்ளி காப்பு ஆகியவை  கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம்  போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவில் வெளியே வந்த  போது உண்ணாமலை யைமர்ம நபர்கள் அவரை தாக்கி கழுத்தில்  அணிந்திருந்த நகைகளை பறித்திருக்கலாம் என்றும், தொடர்ந்து  காதுகளை அறுத்து கம்மலையும், கால்களை வெட்டி வெள்ளி  காப்பையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும்  போலீசார் கருதுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்