SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நுனிநாக்கு ஆங்கில பேச்சுக்கு மயங்கி முகாமிற்கு இடமளித்த கல்லூரிகள

2014-07-18@ 00:11:56

சென்னை: நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் இணைய தளத்தை பார்த்து, அது உண்மையான நிறுவனமா என்பது கூட தெரியாமல், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கல்லூரிகள் வேலை வாய்ப்பு முகாமிற்கு இடமளித்துள்ளன. அதை பயன்படுத்தி 28 வயது பெண், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து 4க்கும் மேற்பட்ட கல்லூரிகளையும், மாணவர்களையும் ஏமாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் பெயரில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக அழைப்பு வந்தது. இந்த அழைப்பு ஆவடி அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கும் வந்தது.
நேற்று முன்தினம் அந்த கல்லூரி வளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அப்போது அங்கு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி, நியூ டெல்லி நொய்டாவை சேர்ந்த சவுமியா (28), அவரது உதவியாளர் பாண்டிச்சேரியை சேர்ந்த பீனா என்ற சையத் சபானா (22) ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் பிரபல நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், ஐதராபாத் கிளை நிறுவனங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தனர். அங்கு வந்திருந்த மாணவர்களிடம் விவரங்களை சேகரித்தனர். மாணவர்களிடம் தலா 1500 பணம் கேட்டனர். வேலைவாய்ப்பு முகாம் நடத்தியவர்கள் பணம் கேட்ட தகவலை மாணவர்கள் தங்களது கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். உடனே கல்லூரி நிர்வாகம் டெல்லியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை இடத்தை தொடர்பு கொண்டு தகவல் கேட்டது. அந்த சாப்ட்வேர் நிறுவனம், நாங்கள் சென்னையில் எங்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவில்லை. அங்கு வந்திருப்போர் எங்களது அதிகாரிகளும் இல்லை என்றனர்.
இதையடுத்து இரு பெண்களும் போலியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது தெரியவந்தது.

இதன்பின், அவர்கள் இருவரையும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார், எஸ்.ஐ கீதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இரு பெண்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோடம்பாக்கம், திருநின்றவூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஒரு வாரமாக போலி வேலைவாய்ப்பு முகாமை நடத்தியுள்ளனர். முகாமில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களிடம் தலா ஸி1500 பணம் பறித்ததும், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் தங்கியிருந்து பணவேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், சென்னையில் வேலை வாய்ப்பு முகாமிற்கு நிறைய டிமாண்ட் இருப்பதும், அதை பயன்படுத்தினால் நிறைய சம்பாதிக்கலாம் என்றும் நினைத்தோம். நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் என் அணுகுமுறையை கண்டு பல கல்லூரிகள் முகாம் நடத்த அனுமதி வழங்கின என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

drug coupon card prescription coupons drug discount coupons
plavix plavix 300 plavix plm
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்