SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தான மூன்று விஷயங்கள

2014-07-11@ 09:58:58

முட்டை ரகசியம்

உலகில் முட்டை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது, சீனா. இரண்டாவது இடம், அமெரிக்காவுக்கு. இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 2000 கோடி முட்டைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. டாக்டர் வில்லியம் போமன்ட் என்பவரின் ஆய்வின்படி, நமது இரைப்பை பச்சை முட்டையை ஜீரணிக்க இரண்டு மணி நேரமும் வேக வைத்த முட்டையை ஜீரணிக்க மூன்றரை மணி நேரமும் எடுத்துக் கொள்கிறதாம்.

அமெரிக்காவில் மேற்கு மாண்டானா பகுதியில் முட்டை மலை அமைந்துள்ளது. டைனோசர்களின் முட்டைகள் இப்பகுதி தரையில் அதிக அளவில் புதைந்திருப்பதால் இப்பகுதிக்கு முட்டை மலை என்று பெயர் வந்ததாம். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கோழி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு கோழிக்கு சிமென்ட் கலந்த உணவை கொடுத்தார்கள். அந்தக் கோழி மிகப் பெரிய உறுதியான, சீக்கிரம் உடையாத முட்டையை இட்டு அசத்தியதாம். ரேவன் பறவை பச்சை நிறத்திலும், பினாமஸ் பறவை மஞ்சள் நிறத்திலும் முட்டையிடும்.

கதை சொன்னவரின் கதை!

முயல், ஆமை கதை நம் எல்லோருக்கும் தெரியும். வேகமாக ஓடும் முயல் அலட்சியத்தால் தூங்கியபோது, மெதுவாக நகரும் ஆமை விடாமுயற்சியால் வெற்றி பெற்ற அந்த கதையை அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என அலுக்க அலுக்கச் சொல்லி நம் காதைக் கிழித்திருப்பார்கள். ஆனால் முயல், ஆமை கதையை முதன்முதலில் சொன்னவர் யார் தெரியுமா?
ஈசாப் ஈசாப் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. அவரது கதையைத் தெரிந்து கொள்வோம். பழங்காலத்தில் ஒரு கிரேக்க அரசனின் அடிமையாக இருந்தார், ஈசாப். பார்ப்பதற்கு அழகில்லாமல் இருந்த ஈசாப்பின் குட்டிக் கதைகள் மக்களை அவர் வசம் ஈர்த்தன.

ஒரு சமயம் கிரேக்க மன்னன் ஈசாப்பிடம் சிறிது பணம் கொடுத்து டெல்பி என்ற நகருக்கு அனுப்பினார். டெல்பி நகர மக்கள் பேராசைக்காரர்களாக இருந்தார்கள். ஈசாப்பிடம் உணவுக்காக நிறைய பணம் கேட்டார்கள். பணம் கேட்ட டெல்பி மக்களுக்காக ஈசாப் ‘பொன் முட்டை இடும் வாத்து’ கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு டெல்பி மக்கள் மனம் திருந்தினர்.

ஈசாப்பின் கதைகள் 600க்கும் மேற்பட்டவை புழக்கத்தில் உள்ளன. வில்லியம் காக்ஸ்டன் என்பவர் 1484ம் ஆண்டு ஈசாப்பின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டார். ஈசாப் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் இருக்கிறது. ஈசாப்புக்கு ரோம் நகரத்தில் ஒரு சிலை கூட இருக்கிறது. ஈசாப்பின் வெட்டுக்கிளியும் எறும்பும், திராட்சை புளிக்கும் என்று சொன்ன நரியின் கதை, மற்றும் ‘புலி வருது... புலி வருது...’ என்று ஊராரை ஏமாற்றிய சிறுவனின் கதை ஆகியவை வெகு பிரசித்தம்.

டால்பினிஸி

டால்பினிஸி என்பது ஒரு மொழி. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்றுதான் இதுவும். ஆனால் டால்பினிஸி மொழியை மனிதர்கள் பேசுவதில்லை. கடலில் வாழும் டால்பின்கள்தான் பேசுகின்றன.
ஆச்சரியம், ஆனால் உண்மை! டால்பின்கள் மற்ற விலங்குகள் போல அல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் வெகு தூரத்தில் இருக்கும் டால்பின்களுடன் இந்த மொழி மூலம் தொடர்பு கொள்கின்றன.

அதன் மொழி விசிலோசை போல இருக்கிறது. அதுவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 32 வகையான விசில் ஒலிகளை டால்பின்கள் எழுப்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த 32 வகை விசில்களும் ஒலி எழுத்துக்கள் என்கிறார்கள். வடிவமற்ற இந்த விசில் ஒலி ஒவ்வொன்றிற்கும் பொருள் உள்ளது. அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் டால்பின்களுக்குத்தான் இருக்கிறதாம். இந்த ஒலி எழுத்துக்களை டாக்டர் லில்லி என்பவர் ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளார்.

இன்று அமெரிக்காவில் டால்பின் பேசும் மொழியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதனுடன் பேசுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இதில் வெற்றி கண்டுவிட்டால் பயிற்சி மூலம் டால்பின்களை நம் வசப்படுத்தி விடலாம். பயிற்சி பெற்ற டால்பின்களின் உதவியுடன் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் செல்லும் திசையைக்கூட அறிந்து கொள்ளமுடியும்.

பயிற்சி பெற்ற டால்பின்கள் வெடிகுண்டு எடுத்துச் செல்லும். புயலில் திசை மாறிய கப்பலுக்கு வழிகாட்டும். தவறி கடலில் விழுந்தவர்களைக் காப்பாற்றும். கால ஓட்டத்தில் மனிதன் புதிய கருவிகளின் உதவியுடன் விலங்குகளுடன் பேசப் போகிறான். அப்படி மனிதனுடன் பேசப்போகும் முதல் விலங்கு டால்பினாகத்தான் இருக்கும்!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்