SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தான மூன்று விஷயங்கள

2014-07-10@ 09:48:24

ரொம்ம்ம்ப பழைய மரபணு

உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அவர்கள் 40 ஆயிரம் ஆண்டு பழமையான ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாகச் சொல்கிறார்கள். வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளார்கள்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பது தெரிகிறது. லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் எப்படி மனிதன் உருவானான் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.

அனிமல்ஸ் பப்ளிக் டாய்லெட்

24 கோடி ஆண்டு கால, வரலாற்று காலத்துக்கு முந்தைய, விலங்குகள் பயன்படுத்திய பொதுக் கழிப்பிடம் ஒன்று அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவீன கால காண்டாமிருகம் போன்ற டினோடொண்டோசோரஸ் என்ற விலங்கால் இடப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான புதைப்படிமக் கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்த இடத்தை, விஞ்ஞானிகள் உலகின் மிகப்பழமையான பொதுக்கழிப்பிடம் என்று சொல்கிறார்கள். இந்த விலங்கினங்கள் ஒட்டுண்ணிகளைத் தவிர்க்கவும், தங்களைக் கொல்லவரும் விலங்குகளை எச்சரிக்கவும் ஒரு யுக்தியாக இது போல ஒரே இடத்தில் சாணம் போட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சாணக்குவியல்கள் எரிமலைச் சாம்பல் அடுக்கால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்து உணவு, அக்காலத்தில் பரவிய நோய்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய ஆய்வுக்கு அடிப்படை ஆதாரங்களாக இவை அமையும்.

ஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்!

பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு கொட்டைகளைச் சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று ‘நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்’ வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.  
கொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்றுக் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

rite aid load to card coupons centaurico.com rite aid store products
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்