அபுதாபியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா: லியோனி தலைமையில் அரங்கம்
2013-12-26@ 11:58:24

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பில் அபுதாபி இந்தியன் பள்ளி கலையரங்கில் டிசம்பர் 20ம் தேதி மாலை 6 மணிக்கு அமைப்பின் 12 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை சங்கீதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புரவலர்கள் சம்பத், நோபல் மெரைன் ஷாகுல் ஹமீது ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் உள்பட பலரை 'அபுதாபி பாரதி நட்புக்காக' பாராட்டி வருவதும் மிகவும் பாராட்டுக்குரியது. இன்று இவ்வரங்கமே நிறைந்திருப்பது இவ்வமைப்பினர் மீது அபுதாபி தமிழர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பே காரணம்.
அடுத்த வருடம் இதைவிட மிகப் பெரிய அரங்கில் விழா நடக்க ஏற்பாட செய்வோம்' என்று மக்களின் கரவொலிக்கிடையே கூறினார். அபுதாபியில் களைகட்டிய லியோனி பட்டிமன்றம் புரவலர்களுக்கு அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் ஹலீல் ரஹ்மான் ஆகியோர் நினைவுப்பரிசை வழங்கினர். முன்னதாக அபுதாபி நாட்டிய ஆசிரியை ஆஷா நாயரின் தலைமையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்ததாக, திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது. 'இன்றைய திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது நடிகர்களே..!, கதையே..!, இயக்குநர்களே..!, இசையே..! ' என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்கில் அமுதா லியோனி, இனியவன், குமரி ஆதவன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
அபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு
துபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு
ராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
யுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி
துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது
தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்