SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்

2019-08-06@ 16:29:31

சிங்கப்பூர் திருமுறை ஏற்பாட்டுக் குழுவும்இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து ஆகஸ்டு நான்காம் தேதி சிராங்கூன் சாலை வள்ளல் பி.கோவிந்தசாமி திருமண மண்டப அரங்கில் ஏற்பாடு செய்த கண்ணப்ப நாயனார் இசை நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் அ.கி.வரதராஜன் எழுதிஇயக்கி தயாரித்த இந்நாடகம் திருமுறை மாநாட்டின் நாற்பதாவது ஆண்டில் நடைபெறுகிறது. அரங்கம் நிரம்பி வழிந்து அரங்கத்திற்கு வெளியேயும் இருக்கைகள் போடப்பட்டு பார்வையாளர்கள் பங்கேற்றனர்.முற்றிலும் திருமுறை மாநாட்டுக் குழுவினரே பங்கேற்ற இந்நாடகம் காட்சிக்குக் காட்சி கரவொலி மேலோங்கதொழில்முறை நாடகக் கலைஞர்களே வியக்கும் வண்ணம் காட்சி அமைப்புக்கள்பின்னணி இசைபாடல்கள் அமைந்திருந்தன.

திண்ணன் எனும் வேடர் குலத்தோன் எவ்வாறு கண்ணப்பனாக உயருகிறான் என்பதைத் தம் கருத்தாழம் மிக்க பாடல்களாலும் பின்னணிக் காட்சிகளாலும் பிரமிக்க வைத்தார் படைப்பாளர் அ.கி.வரதராஜன். திருமுறை மாநாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடகர்களான ஹர்ஷித் பாலாஜிதனுஸ்ரீ வெங்கடேஷ்நவீன் நாகராஜன் மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் சிங்கப்பூரின் பிரபல வயலின் கலைஞர் மணிகண்டன் மிருதங்க வித்துவான் தேவராஜன் துணையோடு பாடி அசத்தி நாடகத்திற்குச் சுவை கூட்டினர். வாய் பேசாமலே பாட்டிற்கு ஏற்ப அங்க அசைவுகளால் பாத்திரங்களாகவே மாறி நடித்த கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நவீன தொழில் நுட்பம் காட்சி அமைப்புக்களுக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. இயற்கைக் காட்சிகள்அருவிஆற்று நீரோட்டம்அடர்ந்த காடுகளில் வன மிருகங்களின் நடமாட்டம்இதில் திண்ணன் வேட்டையாடுதல் முதலியவற்றுக்கு இது நன்கு பயன்பட்டிருக்கிறது். குழந்தைப் பருவத்திலிருந்து காளைப் பருவம் எய்திய திண்ணனை தாரை தப்படை முழங்க பழங்கால கொம்பூதி ஆடிப் பாடி வேடர்குழாம் புடைசூழ பார்வையாளரிடையே அணிவகுத்து வரச் செய்து பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தினர்.இவ்வணிவகுப்பில் இடம் பெற்ற இசைக் கருவிகளை சிங்கப்பூரர் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கோலாட்டம்கும்மி என நாட்டுப் புறக் கலைகளையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. திண்ணனின் அதீத இறை பக்தியை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

சிவபெருமானின் கண்களில் இரத்தம் வடிவதைப் பொருக்க மாட்டாமையால் தன் கண்களைப் பிடுங்கி ஒட்ட வைப்பதும்மற்றொரு கண்ணிலும் இரத்தம் வருவதைப் பார்த்துப் பதைத்துப் போய் ஒரு கண்ணில் அடையாளத்திற்காகச் செருப்புக் காலை வைத்து மறு கண்ணைத் தோண்ட முற்படும்போது சிவபெருமான் நேரில் காட்சியளித்து “ கண்ணப்பா “ எனக் குரல் கொடுத்து ஆட்கொள்ளும் காட்சி அரங்கை வியக்க வைத்து கரவொலியால் அதிர வைத்தது.நிகழ்வு திருமுறை மாநாட்டு மரபுப்படி நடராஜர் பூஜையோடு தொடங்கியது. ஓதுவா மூர்த்திகள் வழிபாட்டை நடத்தினர். திருமுறை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் கருணாநிதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்து அறக்கட்டளை வாரிய ஆலோசனைக் குழுத் தலைவர் ராஜம் கிருஷ்ணன் மற்றும் இந்து அறக் கட்டளை வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி கவுரவித்தனர். நிகழ்வில் கதைச் சுருக்கத்தை அவ்வப்போது ஸ்ரீநிதி சுரேஷ் வழங்கினார்.பரிசாளர்களை சுப்ரா நாகராஜன் அறிமுகப்படுத்தினார். சுருங்கக் கூறின் சுமார் இரண்டு மணி நேரம் சிங்கப்பூரர்களை தெய்விக சூழலில் அமர வைத்து அடுத்த தலைமுறையினருக்குச் சரியான பாதையில் பக்தி மார்க்கத்தை முறையாக கவிஞர் அ.கி.வரதராஜன் மற்றொரு அவதாரமெடுத்து திண்ணப்பனைக் கண்ணப்பனாக்கிப் படைத்து மகிழ்வித்தார் எனலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-08-2019

  26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்