SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி

2018-05-05@ 15:27:00

இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் முன்னிலை வகிப்பது தமிழகம் என்றால் மிகையில்லை அதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளது அதில் ஒன்றாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல்  மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்று மத நல்லிணக்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம் முஹிப்புல்லா தலைமை வகித்தார். கட்டிட கமிட்டி செயலாளர்கள் முஹம்மது ஜாஹிர் ,மன்னார்,பொருளாளர் சேக் மைதீன், ஜமாத் தலைவர் அப்துல் மஜீத் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர். முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் தலைவர் முஹம்மது முஹைதீன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பேராசிரியர் சாஹுல் ஹமீது, தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா, ஐஎப்டி துணை தலைவர் டாக்டர் ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு K.S. சங்கர சுப்பிரமணியன் M.A , திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அகஸ்தியர் கோவில் நிர்வாக தலைவர் சங்கர நாராயணன், நம்பி ராஜன்,ஆறுமுக பெருமாள் மற்றும் காந்திமதிநாதன் . மாவட்ட வக்கீல் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்றனர்.

புதிய பள்ளிவாசல் நிகழ்ச்சியில் மத பேதமின்றி ஒருவருக்கொருவர் தங்களிடத்தில் நிலவும் ஒற்றுமை மற்றும் அன்பு பறிமாற்றங்களை கருத்துகளாக பகிர்ந்து கொண்டது அனைவரையும் மகிழ செய்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்