SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி

2018-03-16@ 14:19:08

துபாய்: துபாயில் இந்திய தொழிலாளர் வள மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் துபாயின் ஜுமைரா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் பிரச்சனைகள், குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், கிரிடிட் கார்டு உள்ளிட்ட பிரச்சனைகள், ஆதார் அட்டை விளக்கம், வாட் வரி தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் 800 46342 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

இந்த வாய்ப்பை அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்