SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சவூதி அரேபியாவில் தமிழ் கலாச்சார அரங்கு!

2018-02-14@ 17:09:40

சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புப் படை, ஒவ்வொரு ஆண்டும் ஜனதரியா என்கின்ற கலாச்சாரத் திருவிழாவை, அதன் தலைநகர் ரியாத்தில் நடத்திக் கொண்டு வருகிறது. இவ்விழாவில் சவூதி அரேபியாவின் பலம், இராணுவத் தளவாடங்கள் மற்றும் அதன் கலாச்சாரம் நாகரீகம், வரலாறு போன்ற விஷயங்கள் அடங்கிய அரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து மகிழ்வுறுவர்.

அந்தக் கலாச்சாரத் திருவிழாவில், ஒவ்வொரு தே(நே)ச நாடுகளையும் கவுரவித்து, அவர்கள் சார்ந்த கலாச்சாரம், வரலாறு, தொழில்வளம், கல்வி வளர்ச்சி போன்ற விஷயங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அரங்குகளை அமைத்துத் தருவர்!

அந்த வரிசையில், 2018 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில் இந்தியாவை கவுரவிக்கும் முகமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, கடந்த ஃபிப்ரவரி 7ஆம் தேதி அன்று, சவூதி மன்னர் இரண்டு புனித பள்ளிகளின் காவலர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்கள்!

மாநில அரங்குகள்

இந்தியத் தூதரகத்தின் வழிகாட்டுதலில், அனைத்து மாநில அரங்குகளும் அமைக்கப்பட்டு, பல்வேறு மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எதிர் வரும் ஃபிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், வியாழன் மற்றும் வெள்ளியன்று தமிழ்நாட்டிற்கான அரங்கு அமைக்கப்பட உள்ளது. ரியாத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ரியாத் தமிழ்ச் சங்கத்துடன் ஒன்றிணைந்து, அதி நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், பிரமாண்டமாக தமிழ் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம் அரங்கு அமைக்கப்பட உள்ளது.

மேலும், தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகள் குறித்த கையேடுகளும், துண்டு பிரசுரங்களும், தமிழர்களுக்கும் - அரேபியர்களுக்கும் வரலாற்று மற்றும் மொழி ரீதியான தொடர்புகள் குறித்தும், ஆத்திச் சூடி, திருக்குறள் போன்றவற்றை அரபு மொழியில் மொழி பெயர்த்த விழா மலரும், தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகையும் அரங்கிற்கு வருபவர்க்கு அளிக்கப்பட உள்ளது, சிறுவர்கள் நம் கலாச்சார உடையிலும் தமிழ்ப் பெருந்தலைவர்கள் போல் வேடமிட்டும், அரங்கிற்கு வருபவர்களை வரவேற்க உள்ளார்கள். ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் மாமல்லபுரம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றை, நம்முடன் பணியாற்றும் அயல்தேசத்து மக்களுக்கு எடுத்துச் செ(சொ)ல்ல, ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, ரியாத் வாழ் தமிழர்கள் மற்றும் அரங்க ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்!

பண்டைய தமிழ் மொழியின் சிறப்பு பாலை வெளியிலும் பரப்பப்பட உள்ளது என்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியே!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்