SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் முன்னாள் கடையநல்லூர் எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

2018-02-06@ 15:04:05

துபாய்: துபாயில் திராவிட முன்னேற்றக் கழக மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளரும், கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.M.A. ரசாக் அவர்களுக்கு வரவேற்பு விழா துபாயில் நடைபெற்றது.அரிகேசவநல்லூர் திரு. எஸ்.எஸ். மீரான் தலைமையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முகம்மது தாஹா முன்னிலையில் கடையநல்லூர் திரு. மூ. மசூது அவர்களின் வரவேற்போடு விழா துவங்கியது. விழாவில் பேசிய திருவாளர்கள் முகம்மது தாஹா, ஷா, யாசின், நஜ்முதீன், பாலா (உதயநிதி மன்றம், துபாய்), சொக்கலிங்கம், அபுதாபி அப்துல் காதர், எஸ்.எஸ். மீரான் மற்றும் திருமதி ஜெசீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கியும் திரு. M.M.A. ரசாக் அவர்களின் சேவை பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

பின்னர் அமீரகம் வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில் ' சிறந்த சமூக நல்லிணக்க சேகவர்' என்ற விருது வழங்கி திரு, M.M.A. ரசாக் அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் ஏற்புரை வழங்கிய திராவிட முன்னேற்றக் கழக மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளரும், கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு. M.M.A. ரசாக் ஏற்புரையாற்றினார். இவ்விழாவில் துபாய் மற்றும் அமீரகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர் விழாவை திரு. சிம்மபாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X