SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஸ்கட்டில் மாபெரும் தமிழர் திருவிழா

2018-02-02@ 12:25:06

மஸ்கட்: மஸ்கட் தமிழ்க்குடும்பங்கள் இணைந்து நடத்திய ‘தமிழர் திருவிழா-2018’ வண்ணமயமாக தமிழர்களின்  பாரம்பரியத்துடன் கூடிய பொங்கல் வைபவத்துடனும், முளைப்பாரி, சமத்துவப் பொங்கல், கரகம், காவடி, காளையாட்டம், கும்மியாட்டம், சிலம்பம், மெல்லிசை நிகழ்ச்சிகளுடனும் காண்போர் கண்களுக்கும், காதுகளுக்கும் இனிய விருந்தாக அமைந்தது.
 
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய, விழாவில் திரைப்பட நடிகர் திரு. பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். தஞ்சை ‘சிவசக்தி கலைக்குழுவினர்’, கலைமாமணி திரு. முத்துக்குமார் தலைமையில் பங்கேற்று நாதஸ்வரம், கரகம், காவடி, காளையாட்டம், கும்மியாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தினை தமிழர்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தின.
 
மஸ்கட் ‘ஜனனி ரிதம்ஸ்’ இசைக்குழுவினரின் இசை நிகழ்சியும், மஸ்கட் மங்கையரின் நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாதஸ்வர இசையுடன் பெண்களின் முளைப்பாரி  ஊர்வலமும் கலந்துகொண்டவர்களைப் பரவசப்படுத்தியது. விழாவினை டி.வி புகழ் நெல்லை செல்வி அவர்கள் விழாவினைத் தொகுத்து வழங்கினார்.
 
விழாவில் கவிஞர். பஷீர் அவர்கள் துவக்கவுரை ஆற்றினார். திருமதி. ஹேமாசுந்தர் வரவேற்புரையாற்றினார். விழாவின் பொறுப்பாளர் திரு. சுந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றியுரையாற்றினர். இயல், இசை, நாடகத் துறைகளில் தங்கள் பங்களிப்புக்காக மஸ்கட் தமிழர்கள் முறையே திரு.K.A. பிள்ளை, திரு. அப்ஸர், திரு. தஸ்லீம் அவர்களுக்கும், மற்றும் கவிஞர்.பஷீர், டாக்டர்.அனுபாமா அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் நெல்லைத் தொழிலதிபர் திரு. இசக்கி அவர்களும், திரு.சுந்தர் அவர்களும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.   
 
மஸ்கட்டில் இது ஒரு மாபெரும் பொங்கல் வெற்றி நிகழ்ச்சியாக அமைந்தது என விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்