SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்

2017-12-08@ 16:25:42

இங்கிலாந்து: இங்கிலாந்து, மேற்கு மிட்லேண்ட்ஸ், டிவிடேல் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென்னிந்திய திராவிட பாணியில், அதாவது பல்லவர், சோழர், பாண்டியர் காலத்து கட்டட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பங்களுடன் கூடிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் 7 மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஏழு குன்றுகள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக மரத்தாலான புத்தர் சிலையும், பைபிள் வாசகம் கொண்ட குன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் சமுதாய கூடத்திற்குள் மத, இன, வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் அனுமதிக்கப்படுவர். கோயிலில் விநாயகர், முருகர், மூலவராக ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள், பத்மாவதி தாயார், ஹனுமன், சிவபெருமான், நவகிரகங்கள், ஐயப்பன், ஷீரடி பாபா ஆகியோர் அமைந்துள்ளனர். இந்த கோயில் வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வார இறுதி நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 2.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்