SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுஏஇ தேசிய தின கொண்டாட்டத்தில் வரவேற்பை பெற்ற தமிழர் விளையாட்டு

2017-12-06@ 10:14:45

துபாய்: யுஏஇ 46வது தேசிய தின விழா கொண்டாட்டம் தமிழர்கள் நிர்வாகிகளாக உள்ள‌ ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது. சபீல் பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோட் பங்கேற்றனர். இதில் விளையாட்டு போட்டிகள்,கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. பார்வையாளர்களாக வந்திருந்த வெளிநாட்டை சேர்ந்தோரும் இவ்விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்ற்னர் .போட்டிகளில் வெற்றி பெற்றவரகளுக்க்கு ஏராளமான பரிசுகளும் மற்றும் குலுக்கலில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது
 
தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக அய்மான் கல்லூரியின் தாளாளர் எம் எம் சாஹுல் ஹமீது, ஈமான் முன்னாள் பொது செயலாளரும் முன்னாள் எம் பியுமான் அப்துல் ரஹ்மான், சீட் தலைவர் எஸ் எம் ஹிதாயத்துல்லாஹ்,சொற்பொழிவாளர் சைபுதின் ரஷாதி ஹஜரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் துபாய் 89.4 தமிழ் எப் எம் சார்பில் தயாரிப்பு தலைமை நிர்வாகி ஆர்ஜே நிம்மி, ஆர் ஜே பிரேவோ , எப் டி பி விளம்பர நிறுவன இயக்குநர் நட்ராஜ், மற்றும் புரவலர்கள் நாகூர் சேக் தாவூத் , சூப்பர் சோனிக் ஜியாவுதீ, ஹமீத், டியர் ஹெல்த் முஹம்மத் அலி, கான்கார்ட் பாரூக், பவர் குரூப் செக்யுரிட்டி இயக்குநர் உள்ளிட்ட பலரும் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்
 
ஈமான் தலைவர் ஹபீபுல்லா தலைமையிலும் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின், துணை தலைவர் மஹ்ரூப் முன்னிலையில் விழா நடைபெற்றது. ஈமான் அமைப்பின் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லா, கல்விக்குழு செயலாளர் பைசுர் ரஹ்மான் விழாக்குழு செயலாளர் ஜமால் முஹைதீன், துணை செயலாளர் நஜீம், இஸ்லாமியா நிகழ்ச்சிகளின் செயலாளர் கோட்டார் சாதிக், மூத்த ஆலோசகர் குத்தாலம் அஷ்ரப் ,ஆலோசகர் யஹ்யா, நிர்வாக செயலாளர், காதர் , அலுவலக மேலாளர் யாகூப், இணை செயலாளர் பாஷா, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்