SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

2017-11-01@ 17:33:35

துபாய்: சார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியில் ஷார்ஜா அரசு சிறப்பு விருந்தினராக  மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில்  தொடர்ந்து 36 வருடங்களாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் உலகம் முழுவதுமிருந்து அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளைச் சார்ந்த , எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஷார்ஜா அரசின் விருந்தினர்களாகக் கலந்து கொள்வர். உலக அளவில் மிகவும் போற்றப்பட்ட சேவைகள் செய்து, விலைமதிப்பில்லா சமூக-கலாச்சார மேம்பாட்டிற்கு மிகப்பெரும் பங்காற்றியவர் என்ற அடிப்படையில் , தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் இவ்வருட சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஷார்ஜா அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இவ்வழைப்பினை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட தளபதி அவர்கள், நவம்பர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி சிறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தளபதியாரை அமீரகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக வரவேற்கும் ஏற்பாடுகள் பற்றியும், தளபதி பங்கு பெறும் இவ்விழாவில் தமிழர்கள் அனைவரையும் பங்கு பெறச் செய்து இப்புத்தக விழாவை தமிழர்கள் திருவிழாவாக விமரிசையாக நடத்துவது பற்றியும் அமீரகம் வாழ் அனைத்து தமிழர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் 28-10-2017 அன்று துபை தேரா ரமதா ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பை அரிகேசவநல்லூர் S.S.மீரான் செய்திருந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்