SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் தொண்டு நிறுவனத்தோடு இந்தியர்கள் இணைந்து 22 டன் உணவு தானியங்கள் வழங்கி உலக சாதனை

2017-10-25@ 17:35:56



துபாய்: சர்வதேச அளவில் அகதிகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 22,172 கிலோ பருப்பு வகைகளை சேகரித்துக் கொடுத்த நெஞ்சம் நெகிழும் சம்பவம் ஒன்று அமீரகத்தில் கடந்த வெள்ளி அன்று எடிசலட் அகாடமி மைதானத்தில் நடந்தது. இந்த சேகரிப்பு துபாய் நகரத்தின் பெயரில் உலக  சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் YEAR OF GIVING ஆக அமீரகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதை நிறைவேற்றும் வகையில் ஐம்பது பள்ளி மாணவர்கள் உட்பட எண்பதுக்கும்மேற்பட்ட தன்னார்வலர்கள் வார ஓய்வு நாளான வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை, பொருட்களை வாங்குவது, பிரிப்பது, பாகிங் செய்வது , வண்டியில் ஏற்றுவதுபோன்ற பல பணிகளை சிட்டாக செய்தனர். இவை சிரியா சோமாலியா ஏமன் போன்ற நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கும் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மற்ற நாட்டு மக்களுக்கும் எமிரேட்ஸ் ரெட் கிரேசென்ட் அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படும்.

எண்ணிக்கைமுக்கியமில்லை. எத்தனை மக்கள்,குழந்தைகள் ,பள்ளிமாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களால் ஆன உதவிகளை செய்ததும்.  கொடுப்பது மகிழ்ச்சி என்றஉணர்வினால்ஒரு நல்ல உன்னத காரணத்திற்க்காக எல்லா வயதினரும் எல்லா நாட்டவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டதும் மிகவும் நெஞ்சை தொடுவதாக இருந்தது என்றுஇந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் ஒருவரானகொடையாளர் திரு  வெங்கட் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தஒரு  பிரமாண்ட  ஒரு நாள் நிகழ்வு அமீரகத்தில் முன்னணியில் இயங்கி வரும் தென்னிந்திய பண்பலை Tamil 89.4 FMயால் ஏற்பாடு செய்யப்பட்டு  திரு வெங்கட்,  எமிரேட்ஸ் செம்பிறை மற்றும் துபாய் சேம்பர்ஸ் இவர்களின் ஆதரவுடன் நடைபெற்றது.

ரேடியோவிலும் இணையதளத்திலும் செய்திதாள்களிலும் வந்த விளம்பரங்கள் மூலமாக இதை அறிந்து பல நிறுவனங்களும் பள்ளி குழந்தைகளும் தனி மனிதர்களும் மனமுவந்து  கொடுத்ததால் முதலில் 10,000  கிலோ என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முடிவில் 22,000 கிலோவைதாண்டியது. சேகரிக்கப்பட்ட பருப்புகளில் (அனைத்து உலர்ந்த) பருப்பு வகைகள், வேர்கடலை, பருப்புகள், பட்டாணி, பீன்ஸ் மற்றும் சோயாபீன்கள் (500 கிராம், 1 கிலோ அல்லது 5கிலோ).அடங்கியது. அனைத்தும் பல்வேறு நாடுகளில் வசிக்கும்,தேவை உள்ளவர்களுக்கு கொடுக்கும் வகையில் துபாயில் உள்ள Emirates Red Crescent இடம் கொடுக்கப்பட்டது. இதனை பாராட்டும் விதமாக “அமீரக மக்கள் மனித நேயத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்”என்று Emirates Red Crescent மேனேஜர் திரு.Mohammed Abdullah Alhaj Al Zaroni அவர்கள் தெரிவித்தார். காலை முதல் மாலை வரை ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என தமிழ் 89.4 FM நடத்திய தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியும் நடந்தது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, படவா கோபி, பாடகிகள் ஹரிதா, ப்ரியா ஆகிய நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. Tamil 89.4 FM நிர்வாக  இயக்குனர் திரு சோனா. ராம் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த விதமான செயல்களில் பொதுமக்கள் பங்கு பெறும்படி அவர் ஊக்கப்படுத்தினார் மேலும் Emirates Red Crescent மேனேஜர் திரு.Mohammed Abdullah Alhaj Al Zaroni,மற்றும் திரு Venkat Krishnamurthy ஆகிய பிரமுகர்களையும்  அவர்களின் வழிகாட்டுதல்களையும் நன்றி கூர்ந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்