SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பார்சல்களுக்கான கடும் வரி விதிப்பை ரத்து செய்ய தமிழர் அமைப்பு வலியுறுத்தல்

2017-10-05@ 17:39:21

துபாய் : வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள்  தாயகத்திற்கு அனுப்பும் ரூ 20 ஆயிரம் வரை மதிப்பில் அனுப்படும்  பொருள்களுக்கு கடும் வரி விதிப்பை ரத்து செய்ய துபாய் ஈமான் அமைப்பு சார்பில்  துபாயில் இந்திய துணை தூதர் விபுலிடம் வலியுறுத்தப்பட்டது

 வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்  இந்நிலையில் சமீபத்தில்  மத்திய அரசின் ஜி எஸ் டி வரி விதிப்பு  அமல்படுத்தப்பட்ட பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருள்களுக்கு கடும் வரி விதிக்கப்பட்டுள்ளது . கார்கோ மூலம்  அனுப்பும் பொருள்களுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. இதனால் வெளிநாடுகளில் இருந்து கார்கோ மூலம் பொருள்கள் அனுப்புவது வெகுவாக குறைந்து விட்டது

 கடந்த 1993ம் ஆண்டு முதல் மத்திய அரசு வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்சல்கள் அனுப்ப வரிச்சலுகை வழங்கி இருந்தது. முதலில் ரூ.5 ஆயிரம் வரையுள்ள பார்சல்களுக்கு வரிசலுகை வழங்கப்பட்ட நிலையில் 2010ல் இது ரூ.10 ஆயிரம் ஆகவும், 2016ல் ரூ.20 ஆயிரம் ஆகவும் வரிச்சலுகை வரம்பு உயர்த்தப்பட்டது. இந்த சலுகையைத்தான் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.   

இதனால் பார்சல் அனுப்பும் கட்டணஙக்ள்கடும் உயர்வால்  வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து தங்களது இல்லங்களுக்கு  தாங்கள் விரும்பிய பொருட்களை அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே  வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் ரூ20 ஆயிரத்திற்கு உட்பட்ட பொருள்களுக்கு வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை குரல் எழுப்பியுள்ளனர். இதனை வலியுறுத்தில் துபாயில்  தமிழகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக செயலபடும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர்   சார்பில்  தலைவர் ஹபீபுல்லாஹ்கான் , பொது செயலாளர் ஹமீது யாசின், பொருளாளர் ஒபூர், ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர்  துபாய்  இந்திய துணை தூதர் விபுலிடம் நேரில் சந்தித்து  வலியுறுத்தி மனு அளித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

  • canada_cannabiss

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்