SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் குறித்து நியூயார்க்கில் உள்ள தமிழ்ச்சங்கம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

2017-09-12@ 14:54:04

நியூயார்க் : ராச்சஸ்ட்டர் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நீட் பற்றிய உரையாடல்களைத் தனது உறுப்பினர்களோடு தொடர்ந்து நடத்தி வந்துகொண்டுள்ளது. இதற்கிடையில் நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் நீதி கேட்டுப் போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி நம்மை துயரத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து ஆன்லைனில் கூடிய நமது செயற்குழுவில் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஹென்ரியெட்டா நகரத்தில் கூடி மருத்துவர். அனிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது எனவும், நீட் அவசியமா இல்லையா என்பது குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், 6 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கடந்த சனிக்கிழமை ஹென்ரியெட்டா ரெக்ரியேசன் சென்டரில் சுமார் ஐம்பது உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். துவக்கத்தில் மருத்துவர். அனிதாவுக்கும், தீவிரவாத இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட காவ்ரி லங்கேஷ் அவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தொடர்ந்து நீட் தேவையா இல்லையா என்ற கலந்துரையாடல் நடந்தது. தேவை, தேவையில்லை, நடுநிலை என மூன்று விதமான கருத்துகளும் எடுத்து வைக்கப்பட்டன. விவாதத்தின் இறுதியில், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் பல லட்சங்கள் நன்கொடை பெற்றுக்கொண்டு சீட் கொடுக்கும் கொடுமையை மாற்ற தனியார் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளுக்கு நீட் போன்ற ஒரு தேர்வை மாநில அரசு நடத்தி குறைந்த பட்ச தகுதி பெற்றவர்களை அரசே நிரப்ப வேண்டும், மற்ற இடங்களுக்கும், அரசுக் கல்லூரிகளின் 85 சதவீத இடங்களை இப்போது உள்ள முறையில் +2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நிரப்ப வேண்டும்.

அதே சமயம் +1 பாடங்களை நடத்தாமல் இருக்கும் நிலையை மாற்ற பதினோராம் வகுப்பைப் பொதுத் தேர்வாக மாற்றி அந்த மதிப்பெண்களையும் கட் ஆஃப் மதிப்பெண்களில் சேர்க்கவேண்டும். மேலும் தேர்வு முறையை மாற்றி மனப்பாடம் செய்தால் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நிலையை மாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதான கருத்துகள் பேசப்பட்டன. ஒருவேளை நீட் திணிக்கப்படுமானால், அதற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்க நமது அமைப்பு முடிந்த உதவிகள் செய்யவேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்