SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளைகுடா நாடுகளில் சிறப்பு தொழுகை

2017-09-01@ 11:08:08

துபாய். யுஏஇ,சவூதி அரேபியா, கத்தார்,குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இன்று 01ம் தேதி தியாக திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையோட்டி இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் பங்கேற்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின்(யுஏஇ) தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் பெருநாள் கொண்டாடப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினர்.காலை 6:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழங்க அதிகாலை தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்